• Please use an working Email account to verify your memebership in the forum

நெடுமாறனின் பொம்மி!

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

நெடுமாறனின் பொம்மி!

"நாம ஜெயிச்சிட்டோம் மாறா!" - இந்த வசனத்தை கேட்கும் போது ஒரு கணம் மனது நெகிழ்ந்து கண்கள் லேசாக எனினும் கலங்கும். வாழ்வில் வெற்றி பெற உழைப்பதற்குத் துணிவில்லாதவனுக்கும் வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணம், கனவு, காதல் என எல்லாம் இருக்கும். அப்படியிருக்க நினைவு தெரிந்த நாள் முதலாக நெஞ்சில் உறுதியோடு வெற்றியை நோக்கி போராடிக்கொண்டிருக்கும் ஒருவனின் காதல் எப்படியிருக்கும்? உலகம் அவனை முழுதாக நம்பாதபோதும் அவனுடன் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்ட அவனது காதலி எப்படியிருப்பாள்? இந்தக் கேள்விகளுக்கான விடை தான் பொம்மி!
நெடுமாறனை அவள் சந்தித்த விதம் கூட அலாதியானது தான். ஊருக்கு உழைத்த ஒரு மனிதரின் பிணத்தின் முன்பு கூத்தாடிக்கொண்டு வரும் அவனைத்தான் அவள் பார்த்திருப்பாள். கூரிய கண்கள், அதில் உள்ள கோபம், சோகம், ஏக்கம் என்ற அணைத்து உணர்வுகளையும் இனம் கண்டு அவனது கண்களின் கேள்விகளுக்கு பதிலாக இவளது கண்களே இருக்கும்.
முதற்பார்வையிலேயே அவனை அவளுக்கு பிடித்திருந்த போதும், அவனை அவள் மறுத்திருப்பாள்; உன்னைப் போல எனக்கும் கனவிருக்கிறது, நானும் என் கனவை நோக்கி ஓட வேண்டும் என்பதற்காக! சிறியது என்றோ பெரியது என்றோ கனவுகளுக்கு பேதமில்லை என்பதை உச்சந்தலையில் உறைக்க அவனுக்கு உணர்த்தியவள் அவள்தான்! ஈர்ப்புக்கும் காதலுக்கும் வித்யாசம் தெரிந்தவள் அவள். அவளைப் புரிந்தவன் அவன்! அதனால் மூன்றாண்டுகள் காத்திருந்தான்!
இந்தப் பிரபஞ்சம் எப்பொழுதுமே விசித்திரமானது. சில நேரங்களில் காத்திருப்புக்குப் பலன் இல்லாதது போல் தோன்றினாலும், நமக்கென்று உள்ளது என்றும் நம்மை விட்டு விலகாது; விலகவும் முடியாது! நமக்கானது நம்மை வந்து அடைந்தே தீரும்! - இது தான் பிரபஞ்ச விதி!
பொம்மியும் மாறனிடம் வந்து சேர்ந்தாள்! - இதுவரையில் அவர்களுக்கிடையே இருந்த ஈர்ப்பும் நேசமும் பெருங்காதலாய் உருவெடுத்தது அவர்களின் திருமணத்தின் பின்பு தான்!
நெடுமாறனையோ இல்லை அவன் ஈட்டும் பொருளையோ நம்பி அவள் அவனை மணக்கவில்லை, மாறாக அவளை நம்பியே அவனை மணந்தாள். என்றாயினும் அவன் தேடும் வெற்றி அவனை வந்தடையும் என்று அவனை விடவும் அவள் தான் அதிகமாக நம்பினாள். அவன் உடையும் ஒவ்வொரு தருணத்திலும் அவனுக்காக அவள் தான் நின்றாள், அவனை விடவும் அவன் கனவை அவளே அதிகம் நேசித்தாள். ஆனால் எத்தனை களேபரங்கள் வந்தாலும் அவளது கனவான, அவளது பேக்கரியையும் அவள் விடாது பற்றிக்கொண்டிருப்பாள்.
வாழ்க்கை துரத்த ஓடிக்கொண்டிருந்த நெடுமாறனுக்கு அவன் அடிப்படைத் தேவைகள் குறித்த கவலையோ கேள்வியோ ஏதும் இல்லாமல் அவளே பார்த்துக்கொண்டாள்.
பதினைந்தாயிரம் பணம் வேண்டுமென அவன் பரிதவிக்க, "என் கிட்ட கேக்குறதுக்கு என்ன கூச்சம்?" என்று அவன் கண் பார்த்து நேராக அவள் கேட்கையில் நெடுமாறனுக்கே தொண்டை சிக்கும்.
அவசர வேலை காரணமாக உடன் வந்தவளை அவன் மறக்கையில், "நானே போய்க்கிறேன்!" என்று சொல்வதாகட்டும்... பத்திரிக்கையாளர்கள் அவனை கேள்விகளால் துளைத்தெடுக்கும் போது பனிக்குடம் உடைந்து பிரசவ வேதனையில் இருக்கும் நிலையிலும், "நான் பாத்துக்கிறேன்!" என்று அவனுக்கு தைரியம் சொல்லி காரியத்தை பார்க்கச் சொல்லும் போதும்... ஒரே கேள்விதான் என்னுள்!
"பொம்மி இல்லையென்றால், நெடுமாறன் யாராயிருந்திருப்பான்?"
நெடுமாறனின் மகிழ்ச்சியை யார் வேண்டுமானாலும் தாங்கிக்கொள்ளலாம். பகிர்ந்துகொள்ளலாம். ஆனால் அவனது ஆவேசத்தை ரௌத்திரத்தை பொம்மியைத் தவிர யாராலும் தாங்கவோ சமாளிக்கவோ இயலாது!
அவனின் இயலாமையை உறவினர்கள் குத்தும் போதும் அவன் எல்லாம் முடிந்தது என்று நின்றபோதும் அவளால் மட்டும் தான் அவனை தேற்ற முடிந்தது. உள்ளம் உலைக்களமாக, தான் எங்கே செல்லாக்காசாகிப் போனோமோ என்று அவன் நின்றிருக்கையில், அவனுக்கு உணவூட்டும் அவளை வார்த்தைகளால் கடுமையாக சாடிவிடுவான் அவன்!
நெடுமாறனின் பிற கோவங்களை கடந்தவளுக்கு அவனின் அந்த வார்த்தைகள் முள்ளாய்த் தைக்க, அங்கிருந்து நகர்ந்துவிடுவாள். கோபம் தணிந்தபின் தன் தவறு புரிய, ஊரெல்லாம் அவளைத் தேடி அலைவான். கடைசியில் அவர்கள் வீட்டிலேயே ஒரு மூலையில் அவள் அமர்ந்திருக்க, கண்டதும் கட்டியணைத்து அவன் கண்ணீரில் கரைய, "உன்ன விட்டு எங்க மாறா போவேன்?" என்று அவள் அவன் முதுகைத் வருடியபடியே கேட்கும் இடத்தில் தான் அவர்களின் காதல் பரிபூரணம் பெறுகிறது!
காதல் என்பது மௌனங்களைப் புரிந்துகொள்வது என்பதை ஒவ்வொரு முறையும் படம் நெடுக பொம்மி நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறாள்!
நெடுமாறன் சொன்ன Business Plan-ஐ கொஞ்சம் திருத்தி அவனிடமே டீல் பேசும் அழகும், பச்சிளம் குழந்தையுடன் மக்களிடம் தன் கணவனின் விமானம் நம்பிக்கையைப் பெறவேண்டும் என்பதற்காய் அவனுடன் பயணம் செய்ய விமானம் ஏறும் தைரியமும் நெடுமாறனின் உயரத்தை நிச்சயம் அதிகரித்திருக்கும்.
யாருக்குத் தெரியுமோ இல்லையோ, நிச்சயம் நெடுமாறனுக்குத் தெரிந்திருக்கும்...
அவன் பொம்மி இல்லாமல் அவனில்லை என்பது!
 
Minnale

Well-known member
Messages
772
Points
93

Director kuda evalo azhga explain panniruka mudiyadhu da.. avalo arumai babe ❤️❤️❤️❤️... Maran boomi vera engum thedi kedaikatha oru uravu..
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

Director kuda evalo azhga explain panniruka mudiyadhu da.. avalo arumai babe ❤️❤️❤️❤️... Maran boomi vera engum thedi kedaikatha oru uravu..
Aama babe . It's precious and rare.. ஒரு குழந்தை போல.. ஒரு வைரம் போல தூய்மையானது... ☺️☺️
 
Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

thozhi,.... rombha azhaga bommiya pathi solli irukeenga.... super.... intha angle la movie ah paakathavanga itha kandippa padikanum :D:D
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

thozhi,.... rombha azhaga bommiya pathi solli irukeenga.... super.... intha angle la movie ah paakathavanga itha kandippa padikanum :D:D
Nandri sagi.. 🥰🥰 antha urr moonjiya meichathukkaagave bommiku thiyagi pattam kudukalam lol🤭🤭
 
Top