• Please use an working Email account to verify your memebership in the forum

இந்த சூழில் டாஸ்மாக் திறப்பது முக்கியமான ஒன்றா????

Sambaavam

Well-known member
Messages
438
Points
93

Reputation:

மதுக்கடைகள் திறக்கப்படுவதால் கொரோனா பரவும் என்பதே பெரும்பாலான மக்களின் கவலையாக இருக்கிறது.

உண்மையில் அதை விட கவலை என்னவென்றால்,

நிலைமை சரியாக இருந்த போது தினமும் வேலைக்கு சென்று சம்பாதித்த போதே இங்கு பெரும்பாலான குடும்பத்தலைவர்கள் அதாவது நம்ம குடிமகன்கள் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி போடுவதில்லை, அப்படியே வாங்கி போட்டாலும் குழந்தைகள் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது குடி போதையில் சாப்பாட்டு தட்டை தூக்கி வீசுவது, சாப்பாட்டு தட்டில் துப்புவது, மனைவி குழந்தைகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்துவது என்று அத்தனை மிருக்கத்தனமான வேலைகளையும் அரங்கேற்றி வந்தார்கள்.

இப்போது வேலையும் இல்லை, வருமானமும் இல்லை, ஏதோ குடும்பத்தை ஓட்டலாம் என்று கைவசம் இருக்கும் கொஞ்சம் பணமும் இனி டாஸ்மாக் கடைகளை நோக்கியே நகரும். பல குடும்பங்கள் ஏற்கெனவே பட்டினியை நோக்கி செல்ல ஆரம்பித்திருக்கும் நேரத்தில் இந்த அறிவிப்பு பெரும்பாலான குடும்பங்களுக்கு பேரிடியாகவே விழப்போகிறது.

குடிக்காத கணவன், குடிக்காத தகப்பன்,குடிக்காத மகன்,என்று கொஞ்சம் நாள் நிம்மதியாக வாழ்ந்து வந்த குடும்பங்கள் மறுபடியும் WWE ring போன்று காட்சியளிக்கப்போகிறது. பெரும்பாலும் கிராமங்களில் இந்த காட்சிகளை காணலாம்.

ஒருவேளை இந்த அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து மக்களுக்கு பசி போக்கும் உணவு பொருட்களை அதிலிருந்து வினியோகம் செய்யுமேயானால் இந்த அரசு மக்களுக்கான அரசு எனலாம். ஆனால், நெருப்பில் நடந்து கொண்டிருக்கும் போது நெருப்பில் எண்ணெய் ஊற்றி வேடிக்கை பார்ப்பது என்பது 8 கோடி மக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அரசு செய்ய வேண்டிய வேலை அல்ல. அதை தான் இந்த அரசு செய்ய துடிக்கிறது.

பாதிப்பு இல்லாத இடம்,பாதிப்பு உள்ள இடம் என்ற பாகுபாடு இல்லாமல் இந்த நேரத்தில் மட்டுமல்ல எந்த நேரத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது என்பது சொந்த நாட்டு மக்களுக்கு Slow Poison கொடுப்பதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தின் கட்டுமானத்தையே சிதைக்கும் வேலை தான். இதை எந்த காலத்திலும் அனுமதிக்க முடியாது.

இனி ஆங்காங்கே, 'போலீஸ் ஐயா நான் குவார்ட்டர் வாங்க தான் போறேன்'

எனும் குரல்கள் ஊர் சுற்ற அனுமதி வாங்கும் வாக்கியமாக பயன்படுத்தப்படுவதையும் கண்கூடாக காணலாம்...

குடும்பத்தலைவிகளின் கண்ணீர் துளிகள் இந்த அரசின் முடிவை சாம்பலாக்கட்டும்....
 

Quinnharls

Member
Messages
48
Points
18

Reputation:

கள்ளு கடை காசிலே தான்டா
கட்சி கொடி ஏறுது போடா ?
 
Top