• Please use an working Email account to verify your memebership in the forum

ஈரோட்டுப் பாதை சரியா?

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

தோழர் ஜீவானந்தம் எழுதிய நூல். ஈரோட்டுப் பாதை என்பது இங்கே பெரியாரின் பாதையை குறிக்கும். பெரியாரின் வழியில் செல்வது சரியா தவறா என்ற கேள்விக்கு பெரியாரின் சமகாலத்தவரான முன்னாள் சுயமரியாதை இயக்கதவரும் பின்னாளில் தீவிர பொதுவுடமைவாதியாக இருந்து மறைந்த ஜீவா எழுதிய நூல்.

பார்ப்பனரின் பூணூலை அறுத்து எரிந்தால் வெற்றி கிட்டுமா? எல்லாம் மாறிவிடுமா? இறைமறுப்பு மட்டுமே பகுத்தறிவா அல்லது அது வெறும் இறைமறுப்பா? எது சமூகநீதி? சமதர்மம் அடைவது எப்படி? பெரியார் உண்மையில் பகுத்தறிவு, சமூகநீதியை பின்பற்றினாரா? அவருடன் பயணித்த சிங்காரவேலர், ஜீவானந்தம் பிரிந்தது ஏன்? ஏகாதிபத்திய எதிர்ப்பில் பெரியாரின் நிலைப்பாடு என்ன? இப்படி பல கேள்விகளுக்கு வெறும் 58 பக்கங்களில் தன் கருத்தை ஆழமாக பதிவு செய்துள்ளார் தோழர் ஜீவானந்தம்..

ஒரு பிரச்சனையை வரலாறு, பொருளியல், வர்க்கபேத ஒழிப்பு கண்ணோட்டத்தில் பார்த்து ஆய்ந்து தீர்க்க வேண்டும் என்ற மார்க்ஸ் கருத்தியலை மண்ணுக்கேத்த மார்க்சியம் என்று சொல்லி இன்று இந்தியாவில் கொலை செய்யும் பொதுவுடமைவாதிகளும், பெரியாரை ஏற்காவிட்டாலே ஆரியத்தின் கைப்பாவை என்று உளரும் திராவிடர்களும் படிக்க வேண்டிய வரலாறு ஈரோட்டுப் பாதை சரியா? சிறு வருத்தம் எனில் இதில் 1947வரை மட்டுமே வரலாற்றை பதிந்துள்ளார்.. அதன் பின்னும் இரண்டாம் பதிப்பு வெளியிட்டு இருக்கலாம் என்ற குறை மட்டுமே.View attachment
 
Last edited:
Top