• Please use an working Email account to verify your memebership in the forum

எம்.ஜி. ஆரின் தோல்வி.

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

அரசியல் அறிவோம்:

இன்றுவரை அதிகமாக பேசப்படும் தலைவர்களுள் எம். ஜி. ஆர் என்னும் ம.கோ.ரா ஒருவர். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு நீங்கா இடம் பிடித்துள்ளார் என்றால் மிகையாகாது. இவரை பற்றி பெருமிதமாக சொல்லும் விடயங்களில் ஒன்று தோல்வி சந்திக்காதவர் என்று சொல்வார்கள். 1972இல் திமுகவில் இருந்து பிரிந்து அதிமுக தொடங்கிய இவர் அதிமுகவின் முதல் தேர்தலான 1977இல் இருந்து அவர்கள் இறக்கும் வரை முதல்வராக இருந்தார். ஆனால் அவர் தோல்வியே அடையவில்லையா என்றால் அடைந்தார் என்றே சொல்ல வேண்டும்.

1977களில் அன்றைய இந்திரா அரசின் ஒடுக்கமுறைக்கு எதிராக ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் வலது இடது என்று பாராமல் அனைவரும் ஒன்றிணைத்தனர். வலதுசாரி RSS கட்சியான பாரத் ஜன சங், மாக்ஸிஸ்ட், திமுக என எல்லோரும் ஒன்றிணைத்து இந்திராவை வீழ்த்தினர். பதவி ஆசை இல்லாத ஜெயபிரகாஷ் நாராயணன் பிரதமர் பதவியை மொராஜி தேசாய் அவர்களிடம் கொடுத்தார். ஆனால் RSS தலையிட்டால் ஏற்பட்ட உள்குழப்பத்தால் அந்த ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின் நடந்த 1980 தேர்தலில் திமுக இந்திராவுடன் கூட்டணி வைத்தது. அதிமுக ஜனதா தளம் உடன் கூட்டணியில் இருந்தது. ஜனதா தளம் நிலையில்லா ஆட்சியை கொடுத்ததால் மக்கள் எம்.ஜி.ஆர் கூட்டணியை ரசிக்கவில்லை. இந்திராவின் நிலையான மக்களாட்சி பிரச்சாரமும் எடுப்பட்டது. இதனால் தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் வென்றது. அதிமுக- ஜனதா தளம் கூட்டணி வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வி அடைந்தது. வெற்றி பெற வைத்த தனக்கு சன்மானமாய் கருணாநிதி கேட்டது அதிமுகவின் ஆட்சியை கலைக்க சொல்லியே. இந்திராவும் இந்த கோரிக்கையை ஏற்று அதிமுக ஆட்சியை கலைத்தார். அந்த வருடத்தில்(1980) நடந்த சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் ஒரே பிரச்சாரத்தையே மேற்கொண்டார். நான் என்ன தவறு செய்தேன். ஏன் என் ஆட்சி கலைக்கப்பட்டது.. மக்களே சொல்லுங்கள்.. இதுவே அவருடைய பிரச்சாரம். முடிவில் தேர்தலில் எம்.ஜி.ஆர் கூட்டணி 162 இடங்கள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.
 
Top