onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
பெரியாரின் திராவிட கழகத்தில் சமரசம் இன்றி பயணித்தவர். இன்று பெரியாரை பற்றி படிப்போர் அனைவர் கையிலும் உள்ள தந்தை பெரியார் ஈ.வெ. ரா. வின் சிந்தனைகள் நூலினை 1974இல் தொகுத்தவர். உண்மையை உள்ளபடி சொல்லியதால் திராவிட கழகத்தில் இருந்து 1975இல் நீக்கப்பட்டார். மாக்ஸிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி என்ற கட்சியை நடத்தினார். மண்டல் கமிஷன் அமைய பெரும் பாடுபட்டவர். தமிழகத்தின் பிற்படுத்தப்பட்டவர் இடஒதுக்கீட்டை 31இல் இருந்து 60ஆக உயர்த்த சொல்லி போராடியவர். அதன் பின் எம்.ஜி. ஆர் அதை 50ஆக மாற்றினார். சில கொள்கைவாதிகள் எந்த சித்தாந்தம் எனினும் பிடிக்கும். அதில் ஐயா ஆனைமுத்து ஒருவர்.. ??
ஆழ்ந்த இரங்கல் ??