Nathira
Elite member
- Messages
- 2,993
- Points
- 113
Reputation:
Baby Romba alaga irukuகாலை எழுந்தவுடன் கையில் எடுக்கும் அலைபேசி முதல் கண் மூடிக் காணும் கனவு வரை எங்கெங்கிலும் நீக்கமற நீயே நிறைந்திருக்கிறாய்!
எனக்கு பிடிக்காத உருளைக் கிழங்கைக் கண்டாலும், பிடித்த சுட்ட கோழியை கண்டாலும் நீ பசியாறினாயா என்றுதான் எண்ணத் தோன்றுகிது!
ஆசீவகம் முதல் உக்ரைன் ரஷ்யா போர் வரை எந்தச் செய்தியைப் பார்த்தாலும் உன்னிடம் பகிறவே கைகள் பரபரக்கின்றன!
சேராத சுருதியில் நாம் சேர்ந்து பாடும் பாடல்களை கேளாது என் செவிப்பறைகள் என்னுடன் சமர் செய்கின்றன!
நினைவின் அடுக்குகளில் எப்போதோ சேகரித்த அர்த்தமற்ற பேச்சுக்களையும் தேடித்தேடி என்னை நானே ஆற்றிக்கொண்டிருந்தேன் - ஆனால்...
கூண்டை விட்டுப் பறக்க முடியாமல் நான் சிக்கித் தவிக்க, என் மனம் என்னிடம் சினம் கொண்டு, என்னைத் துறந்து உன்னிடமே வந்துவிட்டது...
இந்தப் பிடிவாதக்காரியின் பித்து பிடித்த இதயத்தை தயவு செய்து திருப்பி அனுப்பி விடு...
வலி தாள முடியவில்லை!





