• Please use an working Email account to verify your memebership in the forum

கொங்குநாடு

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

காஷ்மீர்க்கு அடுத்து வங்கமா? கேரளமா? பஞ்சாபியா? தமிழ்நாடா? என்ற கேள்விக்கு தமிழ்நாடே என்கிறார்கள். தமிழ்நாட்டை 5 மாநிலமாகவோ அல்லது மூன்று மாநிலமாகவோ பிரிக்க வேண்டும் என்ற சங்கிகளின் நீண்ட ஆசையை இவர்கள் நிறைவேற்ற தயார் ஆகிறார்கள்.

நான் பல முறை சொல்லியது போன்றே. RSS அஜெண்டா என்பது இன்று தொடங்கி நாளை முடிவதல்ல. பல ஆண்டுகள் செயல்திட்டமே அவர்களின் வழி. அவர்களின் அகன்ற பாரதம், ஒற்றை இந்தியா திட்டத்திற்கு தடையாக இருப்பது எது என்றால் தேசிய இனங்களின் இன உணர்வே. காஷ்மீரி, மலையாளி, அசாமி, பஞ்சாபி, வங்காளி, தமிழர்கள் போன்றவர்களின் இன உணர்வு. இந்த இன உணர்வை உடைக்காமல் ஒற்றை இந்தியா சாத்தியம் இல்லை. அதற்கு இந்த இனங்களை துண்டாட வேண்டும். எப்படி? அதிகாரம் அற்ற யூனியன் பிரதேசம் ஆக்க வேண்டும். ஏற்கனவே காஷ்மீர் முடிந்தது. அடுத்து தமிழ்நாடா?

2014 முதலே வட தமிழகத்தில் வன்னியர், கொங்கு பகுதியில் கவுண்டர், தென் தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர் போன்றவர்களை குறி வைத்து காய் நகர்த்திவிட்டார்கள். இந்த குடிகளின் சில தலைவர்களையும் வளைத்துப் போட்டு தன் திட்டத்தை செவ்வனே தொடங்கிவிட்டனர். இவர்களை கொம்பு சீவி விட்டு இவர்கள் வாயாலே தனி மாநிலம் கேட்க வைத்து பிரிக்க முடிவெடுத்துவிட்டனர். மருத்துவர் ராமதாஸ் சில நாட்களுக்கு முன்பு இதை பற்றி பேசியது நினைவு இருக்கலாம். இன்று கொங்கு பகுதியில் இதை பேசுகிறார்கள். நாளை தென் தமிழகத்தில் கிருஷ்ணசாமி மற்றும் முக்குலத்தோர் சமுதாயத்தில் சில அரசியல்வாதிகள் பேசுவார்கள்.

இது வலிமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அவர்கள் வெறுமனே சொல்லவில்லை. வேறு விடயங்களை மறைக்க திசை திருப்பவும் இல்லை.

நிலமிழந்து போனால்
பலமிழந்து போவோம்..
 
Top