• Please use an working Email account to verify your memebership in the forum

பாரி

R

Ravanan

Guest
பாரி பாரி என்று பல ஏந்தி
ஒருவர் புகழ்வர் நெந்நாப்புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு உலகப்புரப்பதுவே
(புறநானூறு : பாடல் 107)
பொருள்:
பாரியின் புகழை பாணர்கள் பாடிக்கொண்டே இருக்கிறார்கள்... மக்களை பாதுகாக்க
பாரி மட்டுமில்லை மாரியும் (மழை) உள்ளது....
மாரி (மழை) கூட சில நேரங்களில் பெய்யாமல் பொய்த்துவிடலாம்...
ஆனால் பாரி ஒருபோதும் பொய்த்ததில்லை...
மண்ணையும், மலையையும், மக்களையும், செடி, கொடி, புல், பூண்டு என அனைத்தையும் நேசித்த தலைசிறந்த உயிர்நேயன் பாரி.

View attachment

சிற்றரசன் பாரியை வீழ்த்த பேரரசர்கள் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் பறம்புமலையை முற்றுகையிட்டபொழுது..... அவர்களிடம் பெரும்புலவன் “கபிலர்” பறம்புமலையின் பெருமையை கூறுகிறார் ...
பறம்புமலையை அவ்வளவு எளிதில் கைப்பற்ற முடியாது.... பறம்புமலை பாரியை வீழ்த்த முடியாத சிறந்த அரணாக திகழ்கிறது.....
பறம்புமலையில் இருக்கும் பாரிக்கும், மக்களுக்கும் உணவுப்பஞ்சம் வரும் அதனால் மலையில் இருந்து கீழே வந்துவிடுவார்கள் என நீங்கள் நினைக்கலாம்..ஆனால்
.
பறம்புமலையில் உழுதொழில் இல்லாமலே பெறக்கூடிய உணவுப் பொருட்களான நெல்விளையும் மூங்கில் காடுகள் நிறைய உண்டு... அதில் கிடைக்கும் அரிசியை வைத்து ஆண்டுக்கணக்கில் சாப்பிடலாம்....பறம்புமலை எங்கும் நிறைந்துள்ள பலா மரத்தின் பெரும்பழங்கள் நிறைந்துள்ளன.....
பூமியில் மறைந்து மண்டிக்கிடக்கும் வள்ளிக்கிழங்கு பறம்புமலையில் தோண்டிய இடங்களிலெல்லாம் தோன்றும்....
இம்மலையில் ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருக்கும் தேன் கூடுகளினின்றும் தேன் தானாகவே வழியும்....
இதனால் பறம்புமலையில் இருப்போருக்கு எப்பொழுதும் உணவுப்பஞ்சம் இருக்காது...
நீர்க்குறைபாடு உண்டாகலாம் என நீங்கள் நினைக்கலாம்....

ஆனால் வானத்து மீன்களை எண்ணமுடியாதுபோல் பறம்புமலையில் எண்ணமுடியாத அளவிற்கு
“ நீர்ச்சுனைகள்” நிறைந்தது....
இடநெருக்கடி உண்டாகி ஒருவேளை பணியலாம்
என நீங்கள் நினைக்கலாம்......

ஆனால் பறம்புமலை வான்போல் பரந்து விரிந்து தன் மக்களை பாதுகாக்கும் வல்லமை உடையது ...
அதனால் மூவேந்தர்களும் இணைந்து போரிட்டாலும் பாரியை வெல்லமுடியாது.....
பாரியும் உங்கள் வாள் வலிகளுக்கு அஞ்சி பறம்பினைத்தரான்..... என மூவேந்தர்களுக்கும் கபிலர் அறிவுரை கூறினார்...,
 
Top