onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1

மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன் என்ற நூல் ஒரு தன் வரலாறு நூல்.. தமிழ் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத, தமிழ் தேசியத்தில் முதன்மையான தலைவர்கள் புலவர் கு. கலியபெருமாள், தோழர் தமிழரசன். ஆனால் இவர்களைப் பற்றிய குறிப்புகள் இங்கே மிகவும் சொற்பமாகவே கிடைக்கிறது. தோழர் தமிழரசன் அவர்கள் பற்றி அவர் எழுதிய "சாதி ஒழிப்பும் தமிழ் தேசியமும்", "பெண்ணாடம் மாநாட்டு அறிக்கைகள்" போன்ற நூல்களும், "தமிழ்நாட்டு விடுதலைப் படை தோழர்களும் வழக்குகளும்" போன்ற நூல்கள் வாயிலாக அறியலாம். அதே போல் புலவர் பற்றி அறிய பெரும் வாய்ப்பு அவர் எழுதிய இந்த நூல் மட்டுமே.
என்ன ஒரு தியாக வாழ்க்கை.. இப்படி ஒரு வாழ்க்கை நம்மால் ஒரு நாள் வாழ முடியுமா? விசாரணை, ஜெய்பீம் போன்ற திரைப்படங்கள் பார்த்து இன்று நெருப்பு விடுகிறோம்.. ஆனால் இவர்கள் அனுபவித்த சிறைக் கொடுமைகள் 100 விசாரணை,ஜெய்பீம்.. குருதி சொட்ட சொட்ட நாட்களை கழித்த சிறை வாழ்க்கை.. அந்த நிலையிலும் மன்னிப்பு கேட்காத மன உறுதி

