• Please use an working Email account to verify your memebership in the forum

MS தோனி

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

எல்லோரும் MS தோனி ஓய்வு பற்றி வருந்துகிறோம். அதிலும் பெரிய கொடுமை என்னவென்றால் இரு உலக கோப்பைகளை வென்ற நாயகனுக்கு ஒரு வழியனுப்பு போட்டி கூட இல்லாமல் ஓய்வு பெறுவது தான். இதற்கு பின்னால் உள்ள காரணம் மிக அதிர்ச்சிகரமானது.

2019 ஜூலை மாதம் நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டி தான் தோனி விளையாடிய கடைசி ஒருநாள் போட்டி. அதற்கு பிறகு எந்த காரணமும் இன்றி தோனி அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

ஜூலை - 2019உலகக்கோப்பை முடியும் தருவாயில் தோனியின் மாநிலமான ஜார்கண்டில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியது. ஆளும் கட்சியான #பாஜக விற்கு மக்களிடம் பெரும் அதிருப்தி நிலவியது. #பாஜக'விற்கு வெற்றி வாய்ப்பு துளியும் இல்லை என்று கள நிலவரம் தெளிவாக உணர்த்தியது.

அந்த நேரத்தில் பாஜக'விற்கு தேவைப்பட்டதெல்லாம் ஒரு பிரபல முகம். ஆம்! இளைஞர்களில் இருந்து வெகுஜன மக்கள் வரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு பிரபல முகம் தேவைப்பட்டது. #பாஜக உடனடியாக அணுகியது ஜார்கண்ட் மண்ணின் மைந்தன் தோனியை தான். பலமுறை கட்டாயப்படுத்தியும், ஆசை வார்த்தைகள் கூறியும் MS.தோனியை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தது பாஜக. தோனி விடாப்பிடியாக மறுத்துவிட்டார். இதெல்லாம் பெரும்பாலான தேசிய ஊடகங்களிலும் வந்த ஆதாரப்பூர்வமான செய்திகள். சங்கிகள் எழுதுவது போல் கற்பனை கதை அல்ல. பின்னூட்டத்தில் ஆதாரங்களை இணைத்துள்ளேன்.

2019 அக்டோபர் மாதம் BCCI செயலாளராக #அமித்ஷாவின் மகன் #ஜெய்ஷாவை நியமித்து அவர்மூலம் மீண்டும் தோனிக்கு மிரட்டல் விடப்பட்டது. எந்த மிரட்டலுக்கு தோனி பணிவதாக இல்லை. தன்னுடைய திறமையால் கிடைத்த பிரபல்யத்தை யாருடைய அரசியல் ஆதாயத்திற்காகவும் கொடுக்க MSD தயாரில்லை.

இறுதியில் 2019 டிசம்பர் மாதம் நடந்த ஜார்கண்ட் தேர்தலில் முக்தி மோட்சா கூட்டணியிடம் பாஜக தோற்றுபோய் மண்ணை கவ்வியது. அவர்களின் கோபம் எல்லாம் தோனியின் மேல் திரும்பியது. BCCI தரப்பில் தோனியிடம் தெளிவாக சொல்லப்பட்டது இனிமேல் வழியனுப்பு விழாவிற்கு கூட எந்த போட்டியிலும் நீ தேர்ந்தெடுக்கப்பட மாட்டாய் என்று. 2020 ஆம் ஆண்டிக்கான BCCI ஒப்பந்த பட்டியலில் இருந்து செயலாளர் #ஜெய்ஷாவால் தோனி தூக்கி ஏறியப்பட்டார். இவ்வளவு பெரிய சீனியர் வீரருக்கு கிரேட்-A வீரருக்கு கண்டராக்ட் கூட வழங்கப்படாமல் நீக்கப்பட்டது BCCI வரலாற்றிலேயே தோனி ஒருவருக்கு தான்.

இந்தியாவே கொண்டாடும் ஒரு வீரன், இரண்டு உலக கோப்பைகளை வென்றெடுத்தவன், ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டு, வழியனுப்பு போட்டி கூட இல்லாமல் ஓய்வு பெறுவதற்கு பின்னால் இருக்கும் காரணம் இது தான். எந்த நாடும் தன்னுடைய வெற்றி வீரனுக்கு செய்யாத துரோகம் இழைக்கப்பட்டான் MSD.

Anyway... தோனிக்கான அங்கீகாரம் மக்களிடம் என்றுமே இருக்கும். கிரிக்கெட் ரசிகர்கள் நெஞ்சங்களில் என்றென்றும் தோனி வாழ்வான். சென்று வா தலைவா! ?

#வெற்றி_நாயகன் #MSDhoni #MSDRetired
 
Suri

Administrator
Staff member
Administrator
Messages
290
Points
63

Reputation:

வருந்த என்ன இருக்கு...வயசானா வழி விட வேண்டியது தான்..
 
onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

View attachment

அன்றைய தினம் தமிழர்கள் தோனி பாசகவிற்கு ஆதரவு தரக்கூடாது என்று கீச்சகத்தில் (Twitter) இரண்டு நாட்கள் களமாடினார்கள்.. அது எல்லாம் முடிந்த கதை.. ஆனால் அடுத்த கதை இன்று.. மீண்டும் தோனியை பாசக வலை வீச தொடங்கியுள்ளது.. சுப்பிரமணிய சாமி கீச்சை கவனிக்க.. நிச்சயம் தோனியின் தேவை அவர்களுக்கு வேண்டும்.. தோனியும் அவர்களுடன் செல்லும் வாய்ப்பும் அதிகம்.. அரசியல் அழுத்தங்கள் எப்படி இருக்கும் என்பது பெரும்பாலானோர் அறிந்ததே..
 
Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

வருந்த என்ன இருக்கு...வயசானா வழி விட வேண்டியது தான்..
Varutham avan porathu illa. naatukaaga aadinan proper send off illala. adhu angeehaaram illanu thaana aaguthu???
 
Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

View attachment 641
அன்றைய தினம் தமிழர்கள் தோனி பாசகவிற்கு ஆதரவு தரக்கூடாது என்று கீச்சகத்தில் (Twitter) இரண்டு நாட்கள் களமாடினார்கள்.. அது எல்லாம் முடிந்த கதை.. ஆனால் அடுத்த கதை இன்று.. மீண்டும் தோனியை பாசக வலை வீச தொடங்கியுள்ளது.. சுப்பிரமணிய சாமி கீச்சை கவனிக்க.. நிச்சயம் தோனியின் தேவை அவர்களுக்கு வேண்டும்.. தோனியும் அவர்களுடன் செல்லும் வாய்ப்பும் அதிகம்.. அரசியல் அழுத்தங்கள் எப்படி இருக்கும் என்பது பெரும்பாலானோர் அறிந்ததே..
Ithula ithana twist irukaa???
 
Suri

Administrator
Staff member
Administrator
Messages
290
Points
63

Reputation:

Varutham avan porathu illa. naatukaaga aadinan proper send off illala. adhu angeehaaram illanu thaana aaguthu???
Mostly apdithaana... Ganguly ku mattum ennachu ?
 
onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

Ithula ithana twist irukaa???
அரசியல் என்னும் ஆடுகளத்தில் இன்னும் பல நுட்பங்கள் உள்ளது.. கிரிக்கெட் ஓர் முன்னேறிய பிரிவினர் விளையாட்டு என்ற கருத்து சமீப காலமாக மக்களிடையே பரவியுள்ளது.. அதன் Power politics மெல்ல மெல்ல சாமானியனிடம் எட்டியுள்ளது.. இந்த நிலையில் காம்பீர், கங்குலி, சேவாக் ஏன் சச்சினே ஒரு தொகுதிக்கு மட்டுமே உபயோகப்படுவார்கள் இந்த பவர் பாலிடிக்ஸில்.. ஆனால் தோனி? பாசக இன்றைக்கு தேவையானதை நிறைவேற்றும் அமைப்பு அல்ல.. அவர்கள் 25 ஆண்டுக்கு பின் நடக்க வேண்டிய ஒன்றிற்கு இன்றே தயாராகும் அமைப்பு..?
 
Top