• Please use an working Email account to verify your memebership in the forum

Ponni Nadhi நஞ்சைகளே புஞ்சைகளே

Reader

Member
Messages
65
Points
18

Reputation:

நஞ்சைகளே புஞ்சைகளே இரம்பைகளை விஞ்சி நிக்கும் வஞ்சிகளே...

Reader

Member
Messages
65
Points
18

Reputation:

ஓ.. காவிரியால் நீர்மடிக்கு
அம்பரமாய் அணையெடுத்தான்

நீர் சத்தம் கேட்டதுமே
நெல் பூத்து நிக்கும்
உளி சத்தம் கேட்டதுமே
கல் பூத்து நிக்கும்

பகை சத்தம் கேட்டதுமே
வில் பூத்து நிக்கும்
சோழத்தின் பெருமை கூற
சொல் பூத்து நிக்கும்

பொன்னி நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள
கன்னி பெண்கள் காணணுமே
காற்ற போல

பொட்டல் கடந்து
புழுதி கடந்து
தரிசு கடந்து
கரிசல் கடந்து
அந்தோ நான் இவ்வழகினிலே
காலம் மறந்ததென்ன

மண்ணே உன் மார்பில் கிடக்க
அச்சோ ஓர் ஆச முளைக்க
என் காலம் கனியாதோ
என் கால்கள் தணியாதோ

பொன்னி மகள்
லாலி லல்லா‌ லாலி லல்லா லாலி லல்லா
பாடி செல்லும்

வீரா சோழ புரி
பார்த்து விரைவா நீ
நாவுகழகா தாவும் நதியாய்
சகா கனவை முடிடா

பொன்னி நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள
கன்னி பெண்கள் காணணுமே
காற்ற போல

செக்க செகப்பி
நெஞ்சில் இருடி
ரெட்ட சுழச்சி
ஒட்டி இருடி

சோழ சிலைதான் இவளோ
சோல கருதாய் சிரிச்சா
ஈழ மின்னல் உன்னால
நானும் ரசிச்சிட ஆகாதா

கூடாதே
ஓகோகோ கடலுக்கேது ஓய்வு
கடமை இருக்குது எழுந்திரு
சீறி பாய்ந்திடும் அம்பாக
கால தங்கம் போனாலே
தம்பியே என்னாலும் வருமோடா

நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே
நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே

பொன்னி நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள
கன்னி பெண்கள் காணணுமே
காற்ற போல

செக்க செகப்பி
நெஞ்சில் இருடி
ரெட்ட சுழச்சி
ஒட்டி இருடி
அந்தோ நான் இவ்வழகினிலே…

குழு :
ஹையே செம்பா செம்பா
ஆண் : காலம் மறந்ததென்ன
குழு : ஹையே …

ஆண் : ஹோ ஓ ஓ ஓ
மண்ணே உன் மார்பில் கிடக்க
குழு : பச்சை நெறஞ்ச மண்ணு
ஆண் : அச்சோ ஓர் ஆச முளைக்க
குழு : மஞ்சு தோறும் மண்ணு
ஆண் : என் காலம் கனியாதோ
குழு : கொக்கு பூத்த மண்ணு
ஆண் : என் கால்கள் தணியாதோ
குழு : வெள்ள மனசு மண்ணு

ஆண் : செம்பனே
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
குழு : …………………..
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு

ஆண் : பொன்னி மகள்
குழு : தீயாரி எசமாரி
குழு : லாலி லல்லா‌ லாலி லல்லா லாலி லல்லா
பாடி செல்லும்
அனைவரும் : வீரா சோழ புரி
பார்த்து விரைவாய் நீ

குழு : தாவு அழகா
தாவும் நதியாய்
சகா.. கனவை ..முடிடா

ஆண் :பொன்னி நதி பாக்கணுமே
குழு : தீயாரி எசமாரி
ஆண் : பொழுதுக்குள்ள
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆண் : கன்னி பெண்கள் காணணுமே
குழு : தீயாரி எசமாரி
ஆண் : காற்ற போல
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு

ஆண் : செக்க செகப்பி
குழு : தீயாரி எசமாரி
ஆண் : நெஞ்சில் இருடி
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆண் : ரெட்ட சுழச்சி
குழு : தீயாரி எசமாரி
ஆண் : ஒட்டி இருடி
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு

ஆண் : சோழ சிலைதான் இவளோ
குழு : செம்பா
ஆண் : சோல கருதாய் சிரிச்சா
குழு : செம்பா
ஆண் : ஈழ மின்னல் உன்னால
குழு : செம்பா
ஆண் : நானும் ரசிச்சிட ஆகாதா
குழு : அம்பா
ஆண் : கூடாதே
குழு : அம்பா

ஆண் : ஓகோகோ கடலுக்கேது ஓய்வு
குழு : செம்பா
ஆண் : கடமை இருக்குது எழுந்திரு
குழு : செம்பா
ஆண் : சீறி பாய்ந்திடும் அம்பாக
குழு : செம்பா
ஆண் : கால தங்கம் போனாலே
குழு : செம்பா
ஆண் : தம்பியே என்னாலும் வருமோடா

ஆண் : நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே
நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே

ஆண் :பொன்னி நதி பாக்கணுமே
குழு : தீயாரி எசமாரி
ஆண் : பொழுதுக்குள்ள
குழு : தீயாரி எசமாரி
ஆண் : கன்னி பெண்கள் காணணுமே
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆண் : காற்ற போல
குழு : தீயாரி எசமாரி

ஆண் : செக்க செகப்பி
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆண் : நெஞ்சில் இருடி
குழு : தீயாரி எசமாரி
ஆண் : ரெட்ட சுழச்சி
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆண் : ஒட்டி இருடி
குழு : தீயாரி எசமாரி

ஆண் : அந்தோ நான் இவ்வழகினிலே
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆண் : ஹோ ஓ ஹோ ஓ
குழு : ஹா..ஆஆ..
ஆண் : ஹோ ஓ ஹோ ஓ
குழு : ஹா..ஆஆ..
ஆண் : ஹோ ஓ ஹோ ஓ
குழு : ஹா..ஆஆ..
 
Reader

Member
Messages
65
Points
18

Reputation:

மண்ணே உன் மார்பில் கிடக்க
பச்சை நெறஞ்ச மண்ணு
மஞ்சு தோறும் மண்ணு
கொக்கு பூத்த மண்ணு
வெள்ள மனசு மண்ணு
வீரம் வெளஞ்ச மண்ணு

வீரா சோழ புரி
பார்த்து விரைவாய் நீ
தாவு அழகா
தாவும் நதியாய்
சகா.. கனவை ..முடிடா

நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே​
கடலுக்கேது ஓய்வு
கடமை இருக்குது எழுந்திரு
சீறி பாய்ந்திடும் அம்பாக
கால தங்கம் போனாலே
தம்பியே என்னாலும் வருமோடா​
 
Last edited:

Reader

Member
Messages
65
Points
18

Reputation:

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சுருக்கம் நேற்று வெளியிடப்பட்டது. கதாபாத்திரங்களைப் பார்த்தேன்.

கல்கியின் பொன்னி செல்வனை அப்படியே எடுப்பாரா? இல்லையேல் வேறு எதும் இணைப்பாரா என தெரியவில்லை.

ஏனெனில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையே, உண்மை வரலாறை திரித்து எழுதப்பட்டது தான்.

ஆதித்த கரிகாலனை பார்ப்பன சூழ்ச்சியால் கொலை செய்து,
சுந்தர சோழனை சிறைப்படுத்தி,
சிறைச்சாலையிலேயே கொன்று,
கணவன் இழந்த துயரத்தில்
ராசராச சோழனையும், குந்தவையையும் பால்ய பருவத்தில் விட்டுவிட்டு, தாய் வானவன் மாதேவி உடன்கட்டை ஏறி,
இதனால் பார்ப்பனர்கள் மீது ஆத்திரம் கொண்ட குந்தவை வைணவ மதத்திலிருந்து நீங்கி...
அதை தொடர்ந்து நடக்கும் வரலாறுகள் மூடி மறைக்கப்பட்டதே கல்கியின் பொன்னியின் செல்வன்.

கி.பி.1006 க்குப் பிறகு குந்தவை என்ன ஆனார் என்று கல்கியும் சொல்லவில்லை. வரலாறும் பதிவு செய்யப்படவில்லை.

சோழ வம்சத்தில் மூன்று குந்தவைகள் உண்டு.
கீழைச் சாளுக்கிய அரசகுலப் பெண்ணான வீமன் குந்தவையைச் சுந்தரசோழனின் தந்தையான அரிஞ்சயச்சோழன் திருமணம் செய்து கொண்டிருந்தான். இவரே முதல் குந்தவை.

அரிஞ்சயச்சோழன், வீமன் குந்தவையைத் திருமணம் செய்ததைப் போன்று, வைதும்ம அரசகுலத்தைச் சேர்ந்த கல்யாணி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்திருந்தான். அரிஞ்சயச்சோழனுக்கும், கல்யாணிக்கும் பிறந்தவனான சுந்தரச்சோழன், தனது பெரிய தாயாரான வீமன் குந்தவையின் நினைவாகத் தனது மகளுக்கு குந்தவை என்று பெயரிட்டான். இவர் இரண்டாவது குந்தவை.

இரண்டாவதாக அறியப்படும் சுந்தரச்சோழனின் மகளான குந்தவைக்கு, மந்தாகினி என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவரே வல்லவராயன் வந்தியத்தேவனைத் திருமணம் செய்தவர்.

குந்தவை நாச்சியாரின் மீது அளவுகடந்த மரியாதையும், அன்பையும் கொண்டிருந்த, குந்தவை நாச்சியாரின் தம்பியும் சோழப் பேரரசனுமான இராஜராஜசோழன், தனது மகளுக்கு குந்தவை என்று பெயரிட்டு அழைத்து வந்தான். இவரே சோழ வரலாற்றில் மூன்றாம் குந்தவையாக குறிப்பிடப்படுகிறார்.

இராஜராஜ சோழனின் தமக்கையான குந்தவை நாச்சியார் திருமணம் செய்த வந்தியத்தேவனும், மகள் குந்தவை திருமணம் செய்த விமலாதித்தனும், கீழைச் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவர்கள்.

திருமாலுக்கு மற்றொரு பெயர் முகுந்தன். முகுந்தன் என்றால் வீடுபேறு அடைந்தவர் என்று பொருள். வடமொழிச் சொல்லான முகுந்தன் என்ற பெயரையே பெண்பாலுக்கு குந்தவை என்று வைத்திருக்கிறார்கள். குந்தவை என்றால் லட்சுமி என்று தெலுங்கில் பொருள் கொள்கிறார்கள்.
பொன்னியின் செல்வன் படத்தில் கதாபாத்திரமாகும் குந்தவை ராசராசசோழனின் தமக்கை.

தஞ்சை அருகே உள்ள வல்லத்தை தலைநகராக கொண்டு நடைபெற்ற முத்தரையர்களின் ஆட்சியை வீழ்த்தியே சோழ வம்ச அரசுகள் உருவானதும்- அதன் பிறகு தஞ்சையை தலைநகராக ஆக்கியதும்.

விஜயாலய சோழவம்சம்
1.விஜயாலயச் சோழன்
(ஆட்சிகாலம்-கி.பி.848-871)
த/பெ சுராதிராசன்
தலைநகரம்-தஞ்சாவூர்

2.ஆதித்த சோழன்
(871-907)
த/பெ விஜயாலய சோழன்
தஞ்சாவூர்

3.முதலாம் பராந்தகச் சோழன்
(907-950)
த/பெ ஆதித்த சோழன்
தஞ்சாவூர்

4.கண்டராதித்த சோழன்
(950-955)
த/பெ முதலாம் பராந்தகச் சோழனின் இரண்டாம் மகன்
தஞ்சாவூர்

5.அரிஞ்சயச் சோழன்
(956-957)
த/பெ முதலாம் பராந்தகச் சோழனின் மூன்றாவது மகன்
தஞ்சாவூர்

6.இரண்டாம் பராந்தகச் சோழன்
(957-973)
த/பெ அரிஞ்சயச் சோழன்
தஞ்சாவூர்

7.ஆதித்த கரிகாலன்
(957-969)
த/பெ சுந்தர சோழன்
காஞ்சிபுரம்

8.உத்தம சோழன்
(970-985)
த/பெ கண்டராதித்த சோழன்
தஞ்சாவூர்

9.முதலாம் ராசராச சோழன்
(985-1014)
த/பெ சுந்தர சோழன்
தஞ்சாவூர்

10.முதலாம் ராசேந்திர சோழன்
(1012-1044)
த/பெ. முதலாம் ராசராச சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்

11.முதலாம் ராசாதிராச சோழன்
(1018-1054)
த/பெ முதலாம் ராசேந்திர சோழனின் மூத்த மகன்
கங்கை கொண்ட சோழபுரம்

12.இரண்டாம் ராசேந்திர சோழன்
(1051-1063)
த/பெ முதலாம் ராசேந்திர சோழனின்
இரண்டாவது மகன்
கங்கை கொண்ட சோழபுரம்

13.வீர ராசேந்திர சோழன்
(1063-1070)
த/பெ இரண்டாம் ராசேந்திர சோழனின் மகன்
கங்கை கொண்ட சோழபுரம்

14.அதி ராசேந்திர சோழன்
(1070)
த/பெ வீர ராசேந்திர சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்

சாளுக்கிய சோழ வம்சம்
15.முதலாம் குலோத்துங்க சோழன்
(1070-1120)
த/பெ முதலாம் ராசேந்திர சோழனின் மகள் வழிப் பேரன்
கங்கை கொண்ட சோழபுரம்

16.விக்கிரம சோழன்
(1118-1136)
த/பெ முதலாம் குலோத்துங்கச் சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்

17.இரண்டாம் குலோத்துங்க சோழன்
(1133-1150)
த/பெ விக்கிரம சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்

18.இரண்டாம் ராசராச சோழன்
(1146-1163)
த/பெ இரண்டாம் குலோத்துங்கச் சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்

19.இரண்டாம் ராசாதிராச சோழன்
(1163-1178)
த/பெ இரண்டாம் ராசராச சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன்
கங்கை கொண்ட சோழபுரம்

20.மூன்றாம் குலோத்துங்க சோழன்
(1173-1218)
த/பெ இரண்டாம் ராசராச சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்

21.மூன்றாம் ராசராச சோழன்
(1216-1256)
த/பெ மூன்றாம் குலோத்துங்கச் சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்

22.மூன்றாம் ராசேந்திர சோழன்
(1246-1279)
த/பெ மூன்றாம் ராசராச சோழன்
கங்கை கொண்ட சோழபுரம்

சோழ வம்சத்தில் இத்தனை கதாபாத்திரங்கள் உண்டு. இந்த ஒவ்வொன்றிற்கும் பின்னால், பெரும் வரலாறும் உண்டு.

சோழர்கள் ஆட்சியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் யாதெனில், 11 ம் நூற்றாண்டில் தொடங்கிய சாதிச்சண்டைகள் தான். இடங்கை 96 சாதிகள், வலங்கை 96 சாதிகள் எனப் பிரிந்து மோதிக் கொண்டதே. இருபிரிவுக்கும் இம்மோதலைத் தூண்டிவிட்டு நடத்தியது, இச்சாதிகளில் அடங்காத பார்ப்பனர்கள் என்பதே வரலாறு.

07-09-22
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Romba detailed aana pathivu. Aathitha karikaalanai soolchi seithi kondravargalaana ravithasan, parameshwaran aagiyoruku enna maathiri dandanai vazhangapattathu endru udaiyaalur kalvettil thelivaga ezhuthapattirunthum athai maraikkum nokkaththodu ezhuthappattathey ponniyin Selvan.
Kunthavai eppothu vainava mathathai thazhuvinaar? Chozhargal saiva pithargalaagaththaan irunthirukkiraargal. Raajarajanin irandavathu magal budhha mathathai thazhuviyathaaga kalvettu saandrugal irukkindrana. Aanal kunthavai vainavaththil irunthatharkaana saandrugal irukkindranava?
Vanthiyathevan saalukkiya vamsathai sernthavaraaga irukkalaam endru varalaatru aringargal karuthivathu unmainthan. Aanaal athey neram avar vaanar Kula veeranaagavum irukka vaaipullathaagave karthapadugirathu. Athanala than kalkiyum vaalathu arasan endru vanthiyathevanai kurippittu iruppaar.
Ethu eppadiyo, antha kathai varalaare allla.. verum karpanai enbathu thinnam. Pada surukkathai paarththathum meh endru than enaku irunthathu.. brammandam kaatchi paduththalil irukkirathey thavira kaatchigalil illai.. thamizh uchcharippum nayamaaga illai... Chozha vamsam pondrum illai!!!
 
Padhumai

Well-known member
Messages
305
Points
93

Wow... very much informative..
 
Enna maari thandanai valangapattathu nu kalvettula iruku nu unaku theriyuma? Therinji iruntha.. share that with us here. Naanum therinjikuren. Apdi yen atha maraichaanga.. avlo periya aala intha parameshwaran and ravithaasan??

Ithu nadanthu 1000 yrs aachu.. aana ponniyin selvan kalki ipo ezhuthunathu thaana? Yen ivlo varaushathuku aparam avanga dhandanaiya maraikka PS ezhuthi irukanum?? 🤔🤔
 
Ithu ellathukum pinnadi oru brahmana arasiyal undu sagi.. ravidasan, parameshwaran, avanga brother ellame chera naattai serntha brahmanargal than. Paandiya aabathuthavigal nu sollitu avanga chozha desathai karuvarukka than kaathirunthargal. Aathitha karikaalan kollappattathum athukaaga than. Uthama chozhan irantha piragu, rajarajan aatchiku vanthathum, avanga and all their family were exciled.. citizen padathula Ajith soldra punishment mathiri.. thondu kizham muthal thottilla irukura kuzhanthai varai.. Kattina thuniyoda naadu kadathirukanga. Athuku muraiya visaranaiyum nadanthiruku. Athu mattum illama, entha kaanthaloor kadikaila vachu intha sathi thittam theettapattatho.. athe kaanthaloor chaalaiyai theeyitu koluthirukan raajaraaja chozhan. Ippo kooda thanjai peruvidaiyar koviloda oru vaayiluku kaanthaloor kadigai vaayilnu Peru irukkam. Antha sambavathai ninaivu vachikarathukaaga.
Ithula vedikkai ennanna.. ipperpatta arasanai than brahmana adivarudi nu ippo urutitu irukanga.. intha Dstock idiots...
Varlatru pizhaigalai ipdi kathai ezhuthi marakkadippathu oru kalai sagi.. nammoda thamizh kadavulgaluku aariya saayam poosina maathiri.. ithuvum oru thiribu than.. thannoda political stand a thakka vachika.. Inga sila per enna vena pannuvanga.. athan intha padatha Ella thamizh desiyavathigalum ethirkaranga. Nandhininu oru kathapaathirame varalatrula illa.. aana avalukaaga enna Aathitha karikaalan thanjai varatha maathiriyum.. eppovum kudichitu paithiyam mathiri por purinjithu irunthannu soldrathu ellam vanmathoda uchakattam...
Aathitha karikaalan was a strong prince.. thiruvottiyur la avanoda pasarai irunthuchu.. melai saalukkiyargalai ulla nuzhaiya vidama thaduththavan Avan.. appadipatta oru maaveeranai izhivu paduththuvathu mathiri iruku intha padam.. i truly hate it!!!
 
Reader

Member
Messages
65
Points
18

Reputation:

கல்கி ஒரு சகாப்தம்... செப்டம்பர் 9.

செப்டம்பர் 9 - 1899
கல்கி அவர்களின் பிறந்ததினம்.

123 ஆவது பிறந்த நாள் இன்று.

அவரைப்பற்றிய ஒரு சில நினைவலைகள்.

கல்கியின் சாதனைதான் என்ன..? அவர் ஒரு இலக்கியவாதியா..? நூறாண்டு கடந்தும் அவர் கொண்டாடப்படுவதன் மந்திரம்தான் என்ன..?

சரித்திரத்தின் பெருமையை அடுப்பறை பெண்களும் எட்டிப்பார்க்கும் நிலையை உருவாக்கியவர் கல்கி..
என்றார் அறிஞர் அண்ணா.

உண்மைதான்.பெரும் ஆய்வாளர்கள் மட்டுமே வலம் வந்து கொண்டிருந்த வரலாற்று உலகின் வாசலை வெகு சாமானியனுக்காக திறந்து விட்டவர்...

1950 ..
கல்கி வார இதழில் பொன்னியின் செல்வன் தொடர் ஆரம்பம் ..

ஒரு அத்தியாயத்தில் இவ்வாறு கூறுவார்.

பிற்காலத்தில் கோப்பரகேசரி என்னும் பட்டத்துடன்
சோழசிங்காதனம் ஏறப்போகும் உத்தமச்சோழரை நேயர்களுக்கு அறிமுகம் செய்கிறோம்.. இந்த கோபரகேசரி என்னும் வார்த்தையின் பரிட்சயம் நீலகண்ட சாஸ்திரி போன்ற ஆய்வாளர்கள் மட்டுமே
அறிந்த ஒன்று. ஆனால் பொன்னியின் செல்வன் வந்தப்பிறகு சரித்திரம் சாதரண மக்களுக்கும் சொந்தமானது..

அன்றைய காலத்தில் நந்தினி கொண்டை மிகவும் வைரலாம்..
இன்றைக்கும் பிரபல பதிப்பகமான
வானதி பதிப்பகம் பொன்னியின் செல்வன் நாயகி வானதி ஏற்படுத்திய தாக்கம்தான்..

1899 ஆம் ஆண்டு
செப்டம்பர் மாதம் 9 ம் தேதி
மயிலாடுதுறை அருகே புத்தமங்கலம் என்னும் கிராமத்தில் பிறந்தார். இயற் பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி.. பெற்றோர்- இராமசாமி - தையல் நாயகி..இவரது மனைவி பெயர் கல்யாணி.. தன் பெயரை மனைவியின் பெயருடன் இணைத்து கல்கி ஆனார்...

கல்கி அவர்கள் எழுதியவை 9 நாவல்கள்.
9 நாடகங்கள். 10 பெருங்கதைகள்.
119 சிறுகதைகள். 500 க்கும் மேற்பட்ட கட்டுரைகள்.

இவர் எழுதிய அலைஓசை நாவல் சாகித்திய அகடாமி பரிசு பெற்றது.

தனது பள்ளிக்காலம் முதலே விடுதலை போராட்டத்தில் பங்கேற்றார்.1921 ல் ஒத்துழையாமை
இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார்..1927 ல் நவசக்தி பத்திரிக்கையின் துணை ஆசிரியர்.
பின்பு 1930 ல் ஆனந்த விகடனில் சேர்ந்தார்.. கல்கி என்ற பெயரில் இவரது எழுதிய முதல் படைப்பு ..
" ஏட்டிக்குப் போட்டி "..

தமிழ்மகன் - குகன் - அகத்தியன் - பிராமண இளைஞன் -விவாசாயி - பெற்றோர் - எமன் - லாங்கூலன். இவைகள் எல்லாம் இவரது புனைப்பெயர்கள்..

தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகள் பிரபலமாக இருந்த அக்காலத்தில் தமிழ் இசையை முன்னெடுத்தவர் கல்கி. எம். எஸ். சுப்புலட்சுமியுடன்
இணைந்து இதற்கான பல நிகழ்வுகளை முன்னெடுத்தார்..எம். எஸ். அவர்கள் நடிப்பில் உருவான மீரா திரைப்படத்திற்கு கதைவசனம் எழுதி,
இவர் எழுதிய காற்றினிலே வரும் கீதம் என்னும் பாடல்
இன்றும் பிரபலம்..

1941 ல் ஆனந்த விகடனில் இருந்து விலகல்..
எம்.எஸ் அவர்கள் நிதியுதவி செய்ய, சதாசிவம் அவர்கள் முன்னெடுக்க, ரசிகமணி டி.கே.சிதம்பரமுதலியார் அவர்கள் உற்சாகமூட்ட,
1941 ல் கல்கி இதழை ஆரம்பித்தார் கல்கி..

1941 அக்டோபர் 16 ம் நாள்
பார்த்திபன் கனவு என்னும்
வரலாற்று நாவல் கல்கியில் தொடராக ஆரம்பம் ஆனது.
1943 பிப்ரவரி மாதம் நிறைவுற்றது..

ஒரு முறை கல்கியும், ரசிகமணி டி.கே.சி.யும் மாமல்லபுர கடற்கரையில் அமர்ந்துள்ளனர்.. அப்போது கல்கி இவ்வாறு கூறுகிறார்.

விதியின் எழுத்தை கிழிச்சாச்சு விட்டகுறை வந்து தொட்டாச்சு..என்ற புகழ் பெற்ற கவிதையைச் சொல்லி. சிற்பிகளின் பேச்சுக்குரலுடன் அவர்களின் உளியின் ஓசையும் எனக்கு கேட்கிறது. ஒவ்வொறு சிற்பமும் உயிர் பெற்று எழுகிறது.பல்லவர்களை எழுத வேண்டும் என்றாராம்.

1944 - ஜனவரி 1 ல் சிவகாமியின் சபதம் தொடர் ஆரம்பமானது. 1946 ஜூன் 30 ல் முடிந்தது..
மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 70,000 பிரதிகள்
என்னும் மிகப்பெரும் இலக்கை கல்கி இதழ் அடைந்தது..

முற்றும் என கொட்டை எழுத்தில் போட்டேன்..
என் 10 வருட பாரம் இறங்கியது. என்றார் கல்கி..ஏறக்குறைய 10 ஆண்டுகாலம் சிவகாமியின் சபதத்தை
பாரமாக சுமந்துள்ளார்..

1950 - அக்கோடபர் 22 கல்கி வார இதழில் ஒரு எளிமையான விளம்பரம்.. ராஜராஜ சோழனின் இளம் பிராயத்தில் சோழநாட்டில் நடந்த சரித்திரக் கதை..
அடுத்தவாரம் முதல்.. பொன்னியின் செல்வன்..

1950 - அக்டோபர் 29.. பொன்னியின் செல்வன் ஆரம்பம் ஆனது..சோழ வரலாறு என்னும் மிகப்பெரும் சரித்திர வாயில் சாமான்யனுக்காக திறந்தது.வாசிப்போனின்
கரங்களை பிடித்து ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல்
பின்னோக்கி அழைத்துச் சென்று வீரநாரயண ஏரிக்கரையில் நம்மை இறக்கி விடுகிறார்.

அன்று ஆரம்பமான அந்த வீரநாரயண ஏரிக்கரைப் பயணம் இன்றும் தொடர்கிறது.

அங்கேதான் நமது நண்பன் வந்தியதேவனின் அறிமுகம் கிடைக்கிறது.. அவனுடன் சேர்ந்தே நமது பயணமும் துவங்குகிறது.
சோழ வரலாற்றின் கதவு திறக்கிறது. வாசிப்பது வரலாற்று நிகழ்வுகளின்
தொகுப்பே என்னும் மனநிலை எளிதாகவே
நம்மை ஆக்ரமிக்கிறது..

அன்று ஆரம்பித்த பொன்னியின் செல்வனின் தாக்கம் 71ஆண்டுகள் கடந்து இன்றும் தொடர்கிறது.
1950 ல் அறிமுகமான கனவு நாயகன் வந்தியதேவன்
இன்றும் அதே மிடுக்கோடு இருக்கும் அதிசியம்..
எது வரலாறு..? எது புனைவு.? என்று இன்றும் தேடிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம்.? பொன்னியின் செல்வனை நேசிப்போரும், விமர்சிப்போரும்,
இருவருக்குமான விவாதங்கள் இன்றும் தொடர்கின்றன. பொன்னியின் செல்வன் பாத்திரங்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு
சூட்டும் வழக்கம் இன்றும்.

பொன்னியின் செல்வன் வெற்றிக்கு என்னதான் காரணம்..? பல நிகழ்வுகள் உள்ளன.

சரியான வரலாற்று ஆதாரங்களில் இருந்து சம்பவங்களை எடுத்தார் கல்கி. கடுந்தமிழ் தவிர்த்து எளிய பழகு தமிழ் மூலம் வாசகர்களை கவர்ந்தார் என்கிறார் கல்கியின் பொறுப்பாசிரியர் ஆர். வெங்கடேஷ்..

என் தாத்தாவின் அளப்பரிய அர்ப்பணிப்பே பொன்னியின் செல்வன் என்கிறார் கல்கியின் பேத்தி லட்சுமி நடராஜன்...

கல்கியின் ஆஸ்தான ஓவியர் மணியம். இக்காலத்தில்
ஓவியர் மணியம் அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பொன்னியின் செல்வன் பிறந்த காலத்தில்
மணியனுக்கு செல்வனும் பிறந்தான் என்றார் கல்கி.
அதுவே பெயராகி
மணியன் செல்வனும் மிகச்சிறந்த ஓவியர் ஆனார்.

கல்கி வசித்த அடையாறு வீட்டில்
இரவு நேரத்தில் எழுதுவார். ஓவியர் மணியம் அவர்களுடன் ஆலோசித்து அவ்வார ஓவியங்களை வரையச் செய்வார். ஒவ்வொறு வாரமும் இரண்டு அத்தியாயங்கள்.
16 பக்கங்கள். ஐந்து ஓவியங்கள்
என்று வகைப்படுத்துவார்.. கோட்டோவியம், நீர் வண்ண ஓவியம், என்று பலவாறு அமர்க்களப்படுத்தினார் மணியம்..ஒவ்வொறு அத்தியாயத்தின் தலைப்புக்கேற்றவாறு ஒரு ஓவியம் இருக்கும்.. பருந்தும் புறாவும் என தலைப்பு.. பருந்து புறா ஓவியம் இருக்கும். ஐயனார் கோவில் என்று தலைப்பு.ஐயனார் கோவில் பற்றிய ஓவியம் இருக்கும். கல்கியின் வசீகர எழுத்து. எளிய நடை , மெல்லிய உரையாடல் , எதார்த்தமான சம்பவங்கள் , எளிய கருத்தாழமிக்க வசனங்கள் இழையோடும் நகைச்சுவை. இப்படி எல்லாமே சரியாக அமைந்ததால்
பொன்னியின் செல்வன் சிகரம் தொட்டது..

1950 அக்டோபர் 29 ல் தொடங்கி 1954 மே 16 ல் பொன்னியின் செல்வன் நிறைவு...

என்னாது..? முடிஞ்சிடுச்சா..? என்றுதான் ஒட்டுமொத்தமாய் குரல்கள் எழும்பின. அது என்னாச்சு.?
உத்மச்சோழருக்கு பட்டம் சூட்டிய பிறகு அருள்மொழி என்னவானார்.? வந்தியத்தேவன் எங்கே சென்றார்..?
இதுபோன்ற பல கேள்விகள் எழுந்தன.
( இன்றளவும் இக் கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கப் பெறவில்லை.)

வெகு சாமர்த்தியமாய் இக்கேள்விகளை எதிர் கொண்டார் கல்கி. பொன்னியின் செல்வன் முடிவுரையில் பதிலும் கூறினார்.

இதன் பிறகு பொன்னியின் செல்வன் ஐந்து முறை கல்கி வார இதழில் தொடராக வந்தது..

1950 - 1954 வரை மணியம் ஓவியம்.
1968 - 1972 வரை வினு ஓவியம்.
1978 - 1982 வரை மணியம் ஓவியம்.
1998 - 2002 வரை பத்மவாசன் ஓவியம்.
2014 முதல் வேதா ஓவியம்..

1954 டிசம்பர் 5ல் பொன்னியின் செல்வன் புத்தகமாய் வெளிவந்தது.

1999 ல் கல்கியின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட்டன.. பொன்னியின் செல்வன்
விஸ்வரூபம் எடுத்தது. பல பதிப்பகங்கள் போட்டியிட்டு பொன்னியின் செல்வனை பதிப்பித்தன.
அனைத்துப் புத்தகக் கண்காட்சியிலும் இடம் பெற்று விற்றுத்தீர்வதே இதற்குக் கிடைத்த மிகப்பெரும் அங்கிகாரம் .

இதோ ..
இவ்வருடம் பொன்னியின் செல்வன் திரைப்படமாகும் லர இருக்கிறது.

கல்கி அவர்கள் மிகச்சிறந்த விடுதலைப் போராட்ட வீரராய் இருந்துள்ளார்.
ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார்.

இவர் எழுதிய தியாகபூமி நாவல் திரைப்படமாய் வெளிவந்தது. அப்படத்தில் தேசபக்கிப்பாடல்கள் மிகுதியாக இருந்ததால் அப்படத்தை தடை செய்யலாம் எனத் தகவல் கிடைத்தது. இயக்குனர் சுப்ரமணியமும் எஸ்.எஸ்.வாசனும் அப்படத்தை விடிய விடிய மக்களுக்கு இலவசமாகக் காட்டினார்கள். தொடர்ந்து அப்படம் திரையிடப்பட்டது.

இந்தியா விடுதலைப்பெற்றது. ஆகஸ்டு 17 வரவேண்டிய கல்கி இதழ், ஆகஸ்ட் 15 ல் சுதந்திர தினத்தன்று வெளிவந்தது .

கல்கி மிகுந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர்.. மெல்லிய நகைச்சுவை அவர் எழுத்துக்களில் இழையோடும்.

வர வர என் கையெழுத்து மிக மோசமாய் உள்ளது. கம்போசிடருக்கு புரிந்தால் சரி என்று எழுதினார்...

அவரது உடல்நிலை மிகுந்த மோசமடைந்தது. மருத்துவரின் பரிசோதனை அறையிலிருந்து வெளிவருகிறார்..

எழுத்தாளார் பகீரதன் ,
என்னாயிற்று என்று கல்கியிடம் கேட்க...

ஒன்றுமில்லை என்கிறார் டாக்டர் ,
என்றார் கல்கி

சந்தோசம்தானே என்றார் பகீரதன்.

சிரித்தபடி கல்கி கூறுகிறார். ஏதாவது இருந்தால் நான் குணமாகலாம். என்னிடம்தான் ஒன்றுமில்லையே..

டிசம்பர்..5. 1954.
கல்கியின் மறைவு.

மீ.ப.சோமு அவர்களின் தலையங்கத்தோடு அவ்வார கல்கி இதழ்.

இதழ் முழுவதும் கல்கிக்கு புகழஞ்சலி செலுத்தும் கவிதைகள். கட்டுரைகள்.

புத்தேனரி ரா.சுப்ரமணியன் இவ்வாறு எழுதுகிறார்..

" மாய்ந்ததே வசன மேதை!
மறைந்ததே ஹாஸ்ய ஜோதி! காய்ந்ததே தமிழ்ப்பூஞ் சோலை!
கல்கியின் எழுது கோலே
ஓய்ந்ததே! மக்கள் உள்ளம்
உடைந்ததே, கண்ணீர் வெள்ளம் பாய்ந்ததே
கல்கி வைத்த பயிரெல்லாம்
செழிக்குமாறே..."

கல்கி ஒரு சகாப்தம்.
நேற்றும்..
இன்றும்..
நாளையும்..
 
Reader

Member
Messages
65
Points
18

Reputation:

Romba detailed aana pathivu. Aathitha karikaalanai soolchi seithi kondravargalaana ravithasan, parameshwaran aagiyoruku enna maathiri dandanai vazhangapattathu endru udaiyaalur kalvettil thelivaga ezhuthapattirunthum athai maraikkum nokkaththodu ezhuthappattathey ponniyin Selvan.
Kunthavai eppothu vainava mathathai thazhuvinaar? Chozhargal saiva pithargalaagaththaan irunthirukkiraargal. Raajarajanin irandavathu magal budhha mathathai thazhuviyathaaga kalvettu saandrugal irukkindrana. Aanal kunthavai vainavaththil irunthatharkaana saandrugal irukkindranava?
Vanthiyathevan saalukkiya vamsathai sernthavaraaga irukkalaam endru varalaatru aringargal karuthivathu unmainthan. Aanaal athey neram avar vaanar Kula veeranaagavum irukka vaaipullathaagave karthapadugirathu. Athanala than kalkiyum vaalathu arasan endru vanthiyathevanai kurippittu iruppaar.
Ethu eppadiyo, antha kathai varalaare allla.. verum karpanai enbathu thinnam. Pada surukkathai paarththathum meh endru than enaku irunthathu.. brammandam kaatchi paduththalil irukkirathey thavira kaatchigalil illai.. thamizh uchcharippum nayamaaga illai... Chozha vamsam pondrum illai!!!
சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் ஒரு தொல்லியல் அறிஞர் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்கிறார்.

தமிழர்களாகிய நாம் இந்திய வரலாறு அனைத்தையும் அறிந்திருப்போம். பேரரசர் அசோகர் பற்றி தெரியும். இராஜபுத்திரர் வீரம் பற்றி அறிவோம். அக்பரின் ஆட்சிமுறை அறிவோம்.

ஆனால்..
நமது தமிழக வரலாறு அவர்களுக்குத் அவ்வளவாகத் தெரியது.

மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜியை நாம் கொண்டாடுவோம். ஆனால் மராட்டியர்களுக்கு பல்லவனையோ சோழனையோ சேரனையோ
பாண்டியனையோ தெரியாது.

சோழர்களா.. அது யார்..?
இராஜராஜனா .. இவர் யார்.? தஞ்சாவூர் எங்கே உள்ளது.? பெரியகோவில் என்றால் என்ன.? இதுதான் வடக்கின் நிலவரம்.

இந்த ஆதங்கத்திற்கு ஒரு தீர்வாக பொன்னியின் செல்வம் திரைப்படம் வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், என்று 5 மொழிகளில் வெளியாகிறது.

நேற்று வெளியான முன்னோட்டம்
5 மொழிகளில் பல இலட்சம் வட இந்திய யார்வையாளர்களை சென்றடைந்தது.

யார் இந்த சோழர்கள்..?
இராஜராஜனின் சிறப்பு என்ன.? தேடலை துவக்கியுள்ளனர் வட பகுதி
மக்கள்.

தமிழர் வரலாற்றை இந்தியா முழுவதும் பரவலாக்கிய பொன்னியின் செல்வன் படக் குழுவினருக்கு வாழ்த்தும் வரவேற்பும்.

இதற்காகத்தானே ஆசைப்பட்டோம்.
 
நம்மவர்களின் வரலாறு போய் சேர வேண்டும் என்பது தான் ஆசையே தவிர, வரலாறு என்ற பெயரில் திரிபுகள் திணிக்கப்படுவது அல்ல. அது ஆபத்தானதும் கூட... பொன்னியின் செல்வன் கதை ஒரு புதினமாக எனக்கு மிகவும் பிடித்ததே.. ஆனால் அது வரலாறு அல்ல என்ற புரிதல் எனக்கு உண்டு. வெறும் கதை என்று மட்டும் அதை படிப்பதற்கும் வரலாறு என்று நம்புவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நாளைக்கு சோழ சரித்திரத்தை தேடும் ஒருவருக்கு இந்தப்படம் ஒரு ஆவணமாக அறிமுகப்படுத்த படும்போது பெரும் சிக்கல் தோன்றலாம். முக்கியமான கதாபாத்திரங்களாக சொல்லப்படும் நந்தினி, ஆழ்வார்க்கடியான், ஈழ நாச்சியார் என்னும் ஊமை ராணி இவை எல்லாம் உண்மை என்று மக்கள் நம்பினால் எவ்வளவு பெரிய அபத்தம்?!
இல்லாத பெண்ணுக்காக பைத்தியமாக அலைந்தான் ஒரு சோழ இளவரசன் என்பது அவமானம் இல்லையா?
ஆதித்த கரிகாலன் இறக்கும் தருவாயில் அருண்மொழி வர்மன் பால் குடி மறக்காத பச்சிளம் குழந்தை என்று கல்வெட்டு சான்றுகள் இருக்கையில்... இந்த கதை நடந்த காலகட்டமே தவறானது அல்லவா?
இப்படி பல திரிபுகள், உண்மை மறைப்புகள் என்று இருக்கும் ஒன்றை வரலாறு என்று சொல்வது மட்டுமே உறுத்துகிறது... மாறாக ஒரு சாதாரண கற்பனை கதை என்று கொண்டால்.. நிச்சயம் போற்றுதலுக்கு உரியதாகவே இப்படம் இருக்கும் என்று நம்புவோம்.
ஒரு திரைப்படத்தின் தாக்கம் மிக அதிகமானது. வரலாற்றில் கொள்ளையன் என்றும் வெள்ளைக்காரனின் அடிவருடியாக இருந்தவன் என்றும் பதியப்பட்ட கட்டபொம்மனை விடுதலை வீரனாக மாற்ற ஒரு திரைப்படமும் அதில் நடித்திருந்த தேர்ந்த நடிகர்களும் மட்டுமே தேவைப்பட்டனர் என்பதை நாம் மறக்கக்கூடாது. வரலாற்றை மறந்த இனம் ஒருபோதும் தழைக்காது என்பதை நாம் வரலாறே நமக்கு உணர்த்தும்.
 
இருப்பதிலேயே சிக்கலான துறை என்றால் அது வரலாற்று துறையே. பார்த்தது கேட்டது பதிப்பித்தது அறிவியல் உண்மை இவைகளின் தொகுப்பாகவே வரலாறு உள்ளது. மற்றத்துறைகளில் அறிவியல் முடிவுகளே இறுதி வடிவம் பெறுகின்றன ஆனால் வரலாறு கற்பனை தன்மையையும் அனுமதிக்கிறது யூகங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன இவற்றை தவிர்க்கவும் இயலாது. வரலாற்று துறை அறிஞர்களிடையே நிறைய முரன் உள்ளது. எது எப்படியோ உண்மை நிலை உணர அறிவியல் வரலாற்று பதிவை மட்டும் கான்பது நன்று. மற்றவை அனைத்தும் இரசிப்பதற்க்கு மட்டுமே. என்னை பொருத்தவரை மன்னராட்சி முறை மனித சமூகம் கடந்து வந்த பாதையில் மோசமான தடமாகவே பார்க்கிறேன். மன்னராட்சி முறையில் மக்கள் மகிழ்வாக இல்லை என்பதே உண்மை. எல்லா அரசனும் அயோக்கியர்களே.
 
Reader

Member
Messages
65
Points
18

Reputation:

மன்னராட்சி முறைக்கு முன்பு இருந்த குழு தலைவன் இன தலைவன்களில் இத்தகைய முறை இல்லை சிற்றரசு பேரரசு என்று விரியும் போது கொடுங்கோல் ஆட்சியே மக்கள் மீது தினிக்கப்பட்டுள்ளது. வேள்பாரி சிறு குழுவின் தலைவனாக இருந்தாலும் சகமக்களுடன் இனைந்து வாழ்ந்த விதம் மூன்று பேரரசுகளை எதிர்கொண்டவிதம் இருதியில் வேள்பாரியை அழிக்க சேர சோழ பாண்டிய பேரரசுகள் இனைந்து போர் புரிந்து வெற்றி காணவேண்டிய வரலாற்று தரவுகளை படிக்கும் போது உண்மை நாயகர்களை மறக்கடிக்க பட்டதும் வரலாற்று பிழையே.
 
உண்மை தான். ஆனால் அரசியல் அதிகாரம் பெற்று இருப்பவர்கள் உண்மைகளை மறைத்தும் திரித்தும் போலி வரலாறுகளை எழுதுதல் என்பது தமிழ் சமூகத்திற்கு மட்டுமே கிடைத்த சாபம் போலும். தங்கள் முன்னோர்களான வைகிங்ஸ் பல கோர கொடூரங்களை செய்திருந்தாலும் அவர்களை அம்மக்கள் எங்குமே விட்டுக்கொடுத்தது இல்லை. இன்றைய புரிதலைக் கொண்டு பண்டைய மக்களை எடை போடுதல் சிக்கலானது. Sapiens நூலில், மனிதன் தன்னுடைய சகோதர இனங்களான homo erectus, Neanderthal உட்பட ஆறு இனங்களை இனப்படுகொலை செய்திருக்கவேண்டும் என்கிறார் அந்நூலின் ஆசிரியர். ஒருவேளை மற்ற மனிதர்கள் தன்னிலிருந்து வேறுபட்டவர்கள் என்று அவன் நினைத்திருந்தால் அவர்களை வாழ விட்டிருப்பான் என்றும், தன்னுடைய விதிகளை மீறி அவன் வித்தியாசப் பட்டிருந்ததாலேயே தண்டனைகள் என்ற பெயரில் அந்த கொலைகள் நடந்தன என்றும் குறிப்பிடுகிறார். அதற்காக இப்பொழுது நம்மை நாமே நொந்துகொள்ளவோ வருதுவதோ தகாது தானே?
வரலாறை நாம் பரந்த நோக்கொடே அணுக வேண்டியிருக்கிறது. எதிரிகளும் துரோகிகளும் நமது வரலாற்றை மாற்றி எழுதி இருக்கையில், எது உண்மை என்பதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் இருந்தும் நம் முன்னோர்கள் எவன் எவனோ வெளியில் இருந்து வந்து நம்மை அடக்கி ஆண்ட போது நிகழ்ந்த கொடுமைகளையும் அவர்கள் சுமந்து கொண்டுள்ள அவலம் இருக்கிறது.
மன்னர்கள் காலம் வேறு. வாணிபத்தில் சிறந்து, அறிவியலில் சிறந்து வாழ்ந்த ஒரு சமூகம் இன்று வெறும் அடிமை மனப்பான்மை கொண்டுள்ளதற்கு நாம் வரலாற்றை இழந்ததே காரணம். தமிழனின் உருக்கு இரும்பை பற்றி Egypt இல் கூட அத்தாட்சி கிடைக்கிறது. ஆனால் இங்கிருப்பவர்களில் எத்தனை பேருக்கு அது தெரியும்?
எல்லா மன்னனும் அயோக்கியன் அல்ல. அவன் மக்களுக்கு எது அறமோ, அதை செய்யவே அவர்கள் முயன்றிருக்கறார்கள்.
இன்றைய ஆட்சியாளர்களின் மக்களாட்சி முறையில் கூட பாலாறும் தேனாறும் ஓடவில்லை என்பது திண்ணம்.
உக்ரைன்-ல் இருந்து சில நூறு குழந்தைகளை ரஷ்யாவிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறார்கள் என்று கதறும் மேற்குலக நாடுகள் ஒன்று கூட ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கும் சிரியாவில் நிகழ்ந்த துயரத்திற்கும் வாய் திறக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இங்கு எல்லாவற்றிலுமே ஒரு அரசியல் பொதிந்துள்ளது.
நம்மை பற்றி நாமே தாழ்வாக நினைக்கும் நிலையில் தான் இந்த வரலாற்று புனைவுகள் எழுதப்படுகின்றன. வெள்பாரி நாவலை மட்டும் வைத்து பார்த்தால் அது தவறாகவே தெரியும். இதே மூவேந்தர்கள் சேர்ந்து தான் குப்தரையும் மொகலாயர்களையும் விரட்டினார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அரச கடமை அறம் என்பது அவர்கள் மக்களுக்கானது என்று அவர்கள் நம்பியதில் பிழையும் இல்லை. அப்படி எல்லா அரசர்களும் கொடுங்கோலர்கள் என்றால்... இன்றைய தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் தமிழ் ஆட்சி மொழியாக அதிகாரத்தில் இருந்திருக்கும்!
மக்களாட்சி என்பது நமது அடுத்த கட்ட நகர்வு. சரியானதும் கூட. ஆனால் இன்றைய நிலையில் இருந்துகொண்டு கடந்த காலத்தை ஆராய்வது சிக்கலானது!!!
 
மக்களாட்சி என்பது நமது அடுத்த கட்ட நகர்வு. சரியானதும் கூட. ஆனால் இன்றைய நிலையில் இருந்துகொண்டு கடந்த காலத்தை ஆராய்வது சிக்கலானது!!
உண்மை தான் இன்றைய நிலையில் இருந்து கொண்டு கடந்த காலத்தை ஆராய்வது சிக்கலானது தான்.

இன்றைய நிலையில் இருந்து கொண்டு எதிர்காலத்தை ஆராயலாமா?
 
Top