• Please use an working Email account to verify your memebership in the forum

Ponni Nadhi நஞ்சைகளே புஞ்சைகளே

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

உண்மை தான் இன்றைய நிலையில் இருந்து கொண்டு கடந்த காலத்தை ஆராய்வது சிக்கலானது தான்.

இன்றைய நிலையில் இருந்து கொண்டு எதிர்காலத்தை ஆராயலாமா?
எதிர்காலத்தை ஆராய்தல் என்பது நம் ஆசையின் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்வது. அதன் பெயர் கணிப்பு... ஒருவேளை அது தவறானாலும் சரியானாலும் பாதிப்பு என்பது குறைவாகவே இருக்கும். நடக்கும் பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்பதே பலரது யோசனையாக இருக்கும். எது எப்படியோ, கடந்த காலம் என்பதும் நிகழ்காலம் என்பதும் நம் கையில் இல்லாத ஒன்று. நிகழ்காலம் மட்டுமே நிதர்சனம். இருந்தாலும், வேர்களை மறக்கும் இலைகளும் கிளைகளும் பெரும்பாலும் அழிந்தே போகின்றன. அது மட்டும் தான் என் கூற்று!
 
Reader

Member
Messages
65
Points
18

ஆகவே, வேர்களை தேடி செல்லும் போது குறுநில மன்னர்கள் சிற்றரசர்கள் சுய சிந்தனையுடன் மக்களுக்காக செயலாற்றியதை காண முடிகிறது. கடையேறும் வள்ளல்களான பாரி ஓரி காரி ஆய்... முதலானவர்கள் நல்லாட்சி புரிந்ததாகவே தோன்றுகிறது. மூவேந்தர்களான சேர சோழ பாண்டிய அரசுகள் சித்தாந்த வழிகாட்டுதலில் சிக்கி மக்களையும் மற்ற அரசர்களையும் தவறான திசையில் ஆட்சி புரிந்ததன் விளைவே காலனி ஆதிக்கத்தில் முடியாட்சி முறை தோற்று வெளியில் இருந்து வந்த வெள்ளையனிடம் அடைமைபட்டு போனதாக உணருகிறேன் இது உலகமுழுமைக்கும் பொருந்தும் இந்தியாவில் இதன் தாக்கம் அதிகம் எனலாம் சிற்றரசனான நந்தவம்சத்தை சானக்கியன் எனும் ஆரியன் தனக்கு அரச மரியாதை தரப்படவில்லை என வெளியில் இருந்து வந்த அலெக்சான்டரை கொண்டு நந்தவம்சத்தை அழித்து வஞ்சம் தீற்று கொண்டான் அப்போது முதலே பெரும்பாலான முடியாட்சிகளில் பார்பணர்களின் கை ஓங்கியது மட்டுமின்றி அதிகாரவட்டத்தில் சனாதன சித்தாந்தம் கோலோச்சி நின்றது அதன் நீட்சியை சோழவம்சத்திலும் காணலாம். இன்னொருபுறம் சனாதன கொள்கைக்கு நேர் எதிராக எழுந்த பொளத்த சித்தாந்தம் அசோகன் போன்ற சாம்ராஜ்ஜியத்தின் ஆனிவேராக இருந்தது.

உலகம் முழுவதும் கிருத்துவம் இஸ்லாம் இந்து தர்ம சனாதனம் சைவ வைணவமும் இதில் அடங்கும் பொளத்த சித்தாந்தங்கள் அரச ஆட்சி முறையில் அதிகாரம் பெற்று மதம் பிடித்து ஆடியதன் வீழ்ச்சியே மன்னராட்சி முறையின் முடிவும் காலனியாதிக்க முறையின் ஆரம்பம் எனலாம். மதம் ஒற்றுமையை குழைத்தது இதுவே நாம் கற்க்கும் வரலாற்று பாடம்.
 
பிற உயிரினங்களைக் காட்டிலும் மனிதன் மட்டும் தனக்கு பரிச்சயம் இல்லாதவர்களிடம் கூட எளிதாக பழகுவதன் காரணம் அவன் நம்பும் சில பல கட்டுக்கதைகள் தான். அதில் மிக முக்கியமானது மதம். அமைதியை போதித்த கிறிஸ்துவ மதத்தில் இருந்தவர்கள் கூட கொடூரமான சிலுவை போரில் ஈடுபட்டனர் என்பதே இதற்கு சான்று.
தன் இனக்குழு கட்டுப்பாடும் பினைப்பும் கொண்டிருக்கவேண்டும் என்பதற்காக உருவாக்கப் பட்டதே மதம். அது பிற்காலத்தில் எண்ணற்ற துயரங்களை மனிதனுக்கு தந்தது என்பதே உண்மை.
சிற்றரசன் பேரரசன் என்றெல்லாம் பேதமில்லாமல் பலர் மக்களுக்கு நல்லாட்சி வழங்கி இருக்கின்றனர். குடவோலை முறை, சாவா மூவா பேராடுகள், நிலங்களை திருத்துதல், எளிய வரி செலுத்தும் முறைகள், பெண் அதிகாரிச்சிகள் என பல்வேறு நலத்திட்டங்கள் இராஜராஜன் காலத்தில் நடைமுறையில் இருந்தன. இருப்பினும் சமீப காலமாக விஜய நகர, நாயக்க மன்னர்களின் ஆட்சியில் நடந்த துன்பியல் சம்பவங்கள் அனைத்தும் (கல்வெட்டு சான்றுகள் இருக்கின்றன) சோழனின் ஆட்சியில் நடந்ததாக திரிக்கப் படுகிறது என்பது கசப்பான உண்மை. தன் மக்களுக்கு நன்மை செய்பவனாக இருப்பதே ஒரு அரசனின் அறம்.
இன்று நம் கண் முன்னே எத்தனை எத்தனை போர் குற்றங்கள் நிகழ்கின்றன? ஈழம் தொடங்கி சிரியா வரை எத்தனை உயிர் உறையும் சம்பவங்களை நாம் கண்டிருக்கிறோம்? இது தான் மக்களாட்சி சாயம் வெளுத்ததன் அறிகுறி!
சாணக்கியன் மட்டுமல்ல... இன்ன பிற ஆரிய பிராமணர்களும் படிநிலை தீண்டாமையை இங்கு அரசர்களின் துணையோடு கட்டமைத்துள்ளனர். விஜயநகர அரசின் ஆரம்ப புள்ளியே சிரிங்கேரி மடம் தானே? தமிழன் வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகில் ஆட்சி புரிந்து 700 வருடங்கள் ஆகின்றது. ஆனாலும் எம் அரசர்களின் மீது சேற்றை வாரி இறைப்பது மட்டும் இன்றும் ஓய்ந்தபாடில்லை... சான்றுகள் கேட்டால், எம் இனத்தின் எதிரி மற்றும் த்ரோகிகளின் மனதில் கற்பனையாக உதித்த சில நாவல்களும் போலி வரலாற்று நூல்களையும் காண்பிக்கின்றன ர். ஆனால் உண்மை வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆய்வுகளை நாம் சாட்சியாக வைத்தாலும் அவர்கள் ஏற்பதில்லை என்பது கொடுமை. இங்கு என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.. ஆனால் கிழக்காசியாவில் கோலோச்சிய தமிழன் நினைத்திருந்தால் அம்மக்களை அடிமை படுத்தி தமிழை ஆட்சி மொழியாகவும் அதிகார மொழியாகவும் மாற்றியிருக்களாம். ஆனால் அது நிகழவில்லையே... அடப்பைக்காரர்களான நாயக்கர்கள் கூட தங்கள் ஆட்சியில் தங்கள் சாதியை சேர்ந்தவர்களை இங்கு பட்டி தொட்டியெங்கும் குடியமர்த்தி பாளையங்களை உருவாக்கி இங்கிருந்த மக்களின் நிலங்களை பிடுங்கி... செய்த கொடுமைகளே சான்று பகர்கின்றன! ஆனால் எந்த தமிழ் மன்னனும் அப்படிச் செய்ததில்லை.. அதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் கூட இல்லை! சிலரின் கற்பனைகளை மட்டும் வைத்துக்கொண்டு முழு தமிழ் இனத்தின் மன்னர்களை தூற்றுதல் கூட ஒரு வகையான அரசியல் லாபத்திற்காகத் தானே தவிர உண்மையில்லை!
வரலாற்றில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்பார்கள்... நாமும் கற்போம்!
 
1663080811655.png1663080852285.png1663080962927.png1663081015724.png

கீழடியில் கிடைத்த சான்றுகள் பண்பட்ட நாகரீகம் இருந்ததற்கான ஆதாரங்களாக உள்ளன. வீதி அமைப்பு கட்டடக்கலை கழிவு நீர் வடிகால் உறை கிணறு, மக்கள் அமர்ந்து பேசும் மன்றம் இன்னபிற. யானை தந்தத்தில் செய்த சீப்பு, சிறு முத்தில் துளையிட்டு கோர்க்கப்பட்ட மாலை, நுணுக்கமாக செய்யப்பட்ட தங்க ஆபரணங்கள். இரும்பு மற்றும் காப்பர் உலோகங்கள் பயன்பாடு இவ்வளவு இருந்தும் இன்னும் ஒரு மத அடையாளம் கூட கண்டுபிடிக்கப்படவில்லை காரணம் இயற்கையை முதலாக முன்னிறுத்திய இனம் மத வழிபாடு ஏதுமற்றே இருந்துள்ளது இது 2600 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகம். ஆகவே, மத நம்பிக்கை நன்கு பண்பட்ட முடியாட்சியிலேயே பின்பற்ற பட்டுள்ளது மட்டுமின்றி இது ஒரு பிற்போக்கான செயலராகவும் இருந்துள்ளது இதற்க்கு முழுக்க முழுக்க வித்திட்டது அரசாட்சி முறையே இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமெனில் அரசாட்சியை விட சிறப்பான சமூக அமைப்பு மண்ணராட்சிக்கு முன்பாகவே இருந்துள்ளதை இது காட்டுகிறது. என்னால் திருக்குறளில் கடவுள் வாழ்த்து இருட்டடிப்பு செய்யபட்டு இடைசொருகலாக இனைக்கப்பட்டதற்க்கு நிறைய ஆதாரங்களை காட்ட முடியும் முதல் குறளான அகர முதல எழுத்தெல்லாம் என துவங்கும் குறளில் ஆதி பகலவன்( சூரியன் ) எனும் வார்த்தை சமஸ்கிருத சொல்லான பகவான் என்று மாற்றப்பட்டுள்ளது அடுத்த 9 குறளும் சந்திரன் மழை காற்று என்று இயற்கையை பற்றி குறிப்பிட்டதை கடவுளை பற்றி பாடியதாக திரிக்கபட்டுள்ளது. எது எப்படியோ மன்னராட்சி என்பது மத சித்தாந்தங்களை பறப்ப ஏற்படுத்தப்பட்ட அமைப்பு முறையாகவே கான்கிறேன்.
 
Attachments

  • 1663080733371.png
    1663080733371.png
    241.1 KB · Views: 0
Last edited:

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

View attachment 4454View attachment 4455View attachment 4456View attachment 4457

கீழடியில் கிடைத்த சான்றுகள் பண்பட்ட நாகரீகம் இருந்ததற்கான ஆதாரங்களாக உள்ளன. வீதி அமைப்பு கட்டடக்கலை கழிவு நீர் வடிகால் உறை கிணறு, மக்கள் அமர்ந்து பேசும் மன்றம் இன்னபிற. யானை தந்தத்தில் செய்த சீப்பு, சிறு முத்தில் துளையிட்டு கோர்க்கப்பட்ட மாலை, நுணுக்கமாக செய்யப்பட்ட தங்க ஆபரணங்கள். இரும்பு மற்றும் காப்பர் உலோகங்கள் பயன்பாடு இவ்வளவு இருந்தும் இன்னும் ஒரு மத அடையாளம் கூட கண்டுபிடிக்கப்படவில்லை காரணம் இயற்கையை முதலாக முன்னிறுத்திய இனம் மத வழிபாடு ஏதுமற்றே இருந்துள்ளது இது 2600 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகம். ஆகவே, மத நம்பிக்கை நன்கு பண்பட்ட முடியாட்சியிலேயே பின்பற்ற பட்டுள்ளது மட்டுமின்றி இது ஒரு பிற்போக்கான செயலராகவும் இருந்துள்ளது இதற்க்கு முழுக்க முழுக்க வித்திட்டது அரசாட்சி முறையே இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமெனில் அரசாட்சியை விட சிறப்பான சமூக அமைப்பு மண்ணராட்சிக்கு முன்பாகவே இருந்துள்ளதை இது காட்டுகிறது. என்னால் திருக்குறளில் கடவுள் வாழ்த்து இருட்டடிப்பு செய்யபட்டு இடைசொருகலாக இனைக்கப்பட்டதற்க்கு நிறைய ஆதாரங்களை காட்ட முடியும் முதல் குறளான அகர முதல எழுத்தெல்லாம் என துவங்கும் குறளில் ஆதி பகலவன்( சூரியன் ) எனும் வார்த்தை சமஸ்கிருத சொல்லான பகவான் என்று மாற்றப்பட்டுள்ளது அடுத்த 9 குறளும் சந்திரன் மழை காற்று என்று இயற்கையை பற்றி குறிப்பிட்டதை கடவுளை பற்றி பாடியதாக திரிக்கபட்டுள்ளது. எது எப்படியோ மன்னராட்சி என்பது மத சித்தாந்தங்களை பறப்ப ஏற்படுத்தப்பட்ட அமைப்பு முறையாகவே கான்கிறேன்.
இறை வழிபாடு என்பதை இன்றிருக்கும் சடங்குகளை மட்டும் வைத்து மதிப்பிட முடியாது. நீங்கள் குறிப்பிட்ட கீழடி நாகரிகத்தின் போது கூட பாண்டியர்கள் அங்கே ஆட்சி செய்திருக்கின்றனர். இதற்கான இலக்கிய சான்றுகளும் வரலாற்று சான்றுகளும் இருக்கின்றனவே! கொற்கை, ஆதிச்சநல்லூர், கொடுமணல் அகழாய்வுகள் கூட பரந்துபட்ட தகவல்களை நமக்கு தந்துகொண்டே தான் இருக்கின்றன. மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே அவன் மற்ற இனங்களை விட அதிகமாக வளர்ந்ததற்கும் வித்தியாசப்பட்டதற்கும் பல காரணங்கள் உண்டு. அதே போல இன்றிருக்கும் மதங்களை அதன் முறையிலேயே அவர்கள் பின்பற்றியதில்லை. ஒரு மரம், ஒரு கல் கூட அவர்கள் வழிபட போதுமானதாக இருந்திருக்கிறது. இன்றைய நம் புரிதலை வைத்து அம்மக்களுக்கு மத நம்பிக்கை இல்லை என்பது எப்படி சரியாக இருக்கும்?
கீழடிக்கு சமகாலமாகவோ அல்லது முந்தைய காலமாகவோ இருக்கும் சிந்து சமவெளி நாகரிகத்தில் பல்வேறு லிங்கங்கள் மட்டுமின்றி ஒரு பெண் தெய்வத்தின் சிலையும் கிடைத்தது. நடன மங்கை என்று மற்றவர்கள் அதை நினைத்திருக்க, சமீபத்திய முடிவுகள் அது தாய் தெய்வம் என்று நிறுவியது.
தமிழனின் வழிபாட்டு முறை இந்துக்களின் வழிபாட்டு முறையோடு வேறுபட்டது.
கடவுளுக்கு படைப்பதற்கு பருப்பும் நெய்யும் சோரும், தங்கமும் வைரமும் பெரும் பணமும் தேவையில்லை. பசுவிற்கு ஒரு வாய் பச்சிலை போதும். அதுவும் இல்லையென்றால் மக்களிடம் இன்சொல் சொன்னால் போதுமென்று தான் நம் மறைகள் சொல்கின்றன. இன்றளவும் நாம் குலதெய்வத்தை வழிபடத்தான் செய்கிறோம். நடுகல் வழிபாடு கூட தொடர்கிறது.
தொல்காப்பியம் கூட ஐந்திணைகளுக்கும் முதற்கடவுளர்கள் உண்டு என்றே கூறுகிறது. முருகன், மாயோன், இந்திரன், வருணன், கொற்றவை என நமக்கும் இயற்கை சார்ந்த கடவுளர்களுக்குமான பிணைப்பு எப்போதும் இருந்திருக்கிறது. நமக்கு மட்டுமல்ல, Aztec maayan, Inca போன்ற பழங்குடி இனத்திலும் கிரேக்க, ரோமானிய, எகிப்திய சம்ராஜியங்களிலும் இறை நம்பிக்கை தழைத்திருக்கிறது!
அதனால் மன்னர்கள் என்று மக்கள் மாறுவதற்கு முன்னரே இங்கு வழிபாடுகள் இருந்திருக்கிறது! உருவ வழிபாடு அதிகமில்லாமல் இருந்திருக்கலாம். ஏனெனில் சைவத்தில் ஒரு லிங்கம் போதும், கௌமாரத்திற்கு ஒரு வேல் போதும்... விநாயக வழிபாட்டிற்கோ சிறிது சாணமும் இரண்டு அருகம்புல்லும் போதும்! தமிழனின் வழிபாடு எளிமையானது... நிறுவனமாக்கப்பட்ட மதங்கள் தோன்றி, மன்னர்களை கைக்குள் போட்டுக்கொண்டு இங்கே பல கொடுமைகள் நடந்தேறிய வரை இங்க சமத்துவம் இருந்தது.
Pagan மதத்தை வழிபட்ட பல மன்னர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியதும், படிநிலை தீண்டாமையை இங்கே திணித்த விஜயநகர, நாயக்க மன்னர்களும் அவர்களுடைய குருக்களான சங்கராச்சாரியார்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை! ஆனால் அவர்கள் செய்த பாவங்களையும் சேர்ந்து சுமப்பது என்னவோ எம் தமிழ் மன்னர்கள் தான்!
மன்னராட்சி என்பது கேடானால்... மக்களாட்சியின் அவலங்களுக்கு என்ன பதில்?
உண்மையில் எந்த ஆட்சியாக இருந்தாலும் பணமும் அதிகாரமும் இருப்பவனுக்கு எதுவம் ஆகப்போவதில்லை என்பதே நிதர்சனம்!
 
Reader

Member
Messages
65
Points
18

Reputation:

குல தெய்வ வழிபாடு, ஊர் காவல் தெய்வ வழிபாடு எல்லாம் மூதாதையர் வழிபாட்டு முறை. தாய் தந்தையை வணஙாகுவது போன்று. ஊரை காவல் காத்த காவலர்களுக்கு மரியாதை செய்தல் இதில் அய்யனார் கருப்பர் காளி மாரி முருகன் அனைவரும் அடங்குவர்.

சானத்தை பிடித்து வைத்து உழவு வேலை துவங்குவது உழவுக்கு உதவும் கால்நடைக்கு நன்றி சொல்ல. ஆனால் பின்பு விநாயகராக திணிக்கப்பட்டது.

விநாயகம் என்பது புத்தரின் பெயர்.

ஆண் பெண் பிறப்புரிப்பின் வடிவமே லிங்கம் அண்டத்தை நுழைத்து வெளிவரும் சிலை அமைப்பு சிவனாக மாற்றப்பட்டது.

சிவன், விஷ்ணு, பிரம்மண் வாழ்ந்ததற்கான எந்த வரலாற்று சான்றும் இல்லை அனைத்தும் கட்டுக்கதைகள்.

புத்தர் தலை நீக்கப்பட்டு யானை தலை பொருத்தி, போதிமரத்தில் ( அரசமரத்தில் ) இருந்த புத்தர் சிலைகள் நீக்கப்பட்டு விநாயகர் எனும் புது தெய்வம் உருவாக்கப்பட்டது. அதற்கு புது கதை எழுதி சிவன் பார்வதிக்கு பிறந்த குழந்தை என நம்பவைத்து...

புத்தவிகார்கள் அனைத்தும் இந்து கோவிலாக மாற்றப்பட்டன. திருப்பதியில் இருப்பது புத்தர் சிலைதான். முகத்தில் இருக்கும் நாமத்தை நீக்கி, ஆபரணங்களை அகற்றினால் தெரியும்.

அய்யப்பன் என்பதும் புத்தரின் மற்றொறு பெயர்தான்.

இந்து மததிற்க்கு என்று எந்த வரலாறும் இல்லை எல்லாம் திருடப்பட்ட வரலாறுதான்.

பண்பாடு, கலாச்சாரம் வாழ்கை முறை மத சாயம் பூசபட்டது இரண்டையும் பிரித்து பார்க்க வேண்டும்.
 
Last edited:

Reader

Member
Messages
65
Points
18

Reputation:

உலகில் இந்துக்கள் வாழும் நாடுகள்.

உலகில் மொத்த நாடுகள் 245.
ஐநா சபையின் உறுப்பு நாடுகள் 193.
உலகவங்கி ஆப்பிரிக்க யூனியன் போன்ற சர்வதேச அமைப்புகளில் உறுப்பினராகி,பிற நாடுகளுடன் தொடர்புள்ள நாடுகள்-9
அருகிலுள்ள நாடுகளை அண்டியுள்ள நாடுகள்-38
சர்வதேச உடன்படிக்கைகள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நாடுகள்-5

ஆங்கில எழுத்தில் W X என்ற இரண்டு எழுத்துகளில் தொடங்கும் நாடுகள் இல்லை.
West Indies என்பது தனிநாடு அல்ல. பல நாடுகளின் கூட்டமைப்பே.

ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில்
ஆசிய கண்டத்தில் 48
ஐரோப்பா கண்டத்தில் 44
அமெரிக்க கண்டத்தில் 35
ஆப்பிரிக்க கண்டத்தில் 54
ஆஸ்திரேலியா கண்டத்தில் 12 நாடுகள் உள்ளன.

193 நாடுகளில் 184 நாடுகளில் 12 கோடி மக்கள், இந்து என்ற தன்னுணர்வு கொண்ட வழிபாட்டு முறைகளை உருவாக்கி வாழ்கின்றனர்.
ஐரோப்பாவின் பால்கன் குடா பகுதியில் உள்ள 8 நாடுகளிலும்
மத்திய ஆப்பிரிக்காவிலும் யாரும் இல்லை.

184 நாடுகளில் வாழும் 12 கோடி இந்துக்களில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் ஆசியக்கண்டத்தில் இந்தியாவைத் தவிர, பிறநாடுகளில் வாழும் இந்துக்கள் எண்ணிக்கை 11 கோடி பேர்.
மற்ற கண்டங்களில் வாழ்வோர் 1 கோடி பேர்.

இந்த 12 கோடி மக்கள் வாழும் எந்த நாட்டிலாவது தாங்கள் இந்து மதத்தைப் பின்பற்றுவதால் தாக்கப்படுகிறோம் என்ற குரல் எழுந்துள்ளதா?
அந்நாடுகளிலும் கூட மதவெறி காட்டுமிராண்டிகள் உண்டு.
ஆனால் காட்டுமிராண்டிகளே ஒரு நாட்டை ஆளும் அதிகாரத்தை அந்த மக்கள் வழங்கவில்லை.

இந்தியாவில் காட்டுமிராண்டிகளிடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டோம்.
தலைப்பாகை கட்ட ஆசைப்பட்டு கோவணத்தை இழந்து நின்ற கதையாக மாறியுள்ளது.

உலகில் பல பகுதிகளில் உருவான மதங்கள், பலநாடுகளிலும் பரவியுள்ளது. அந்தந்த நாட்டு மக்கள் அதை ஏற்றுக் கொண்டு வாழ்கின்றனர். ஆனால் இங்கிருந்து சென்ற இந்து மக்களே உலகில் பரவி வாழ்கின்றனர். அந்தந்த நாட்டு மக்கள் இந்து மதத்தில் சேர முடியவில்லை. ஏனெனில் இந்துமதம் சாதியாக இருப்பதால் தான்.
உலகம் முழுமையும் இந்துமதம் பரவுவதற்காகவாவது சாதி முறையே ஒழிக்க முன் வருவார்களா?

மதவெறியை தனிமைப்படுத்துங்கள்.
மதச்சார்பின்மையை பாதுகாத்திடுங்கள்.

(அமெரிக்க அரசுத்துறை வெளியிட்ட சர்வமதச் சுதந்திர அறிக்கையிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களே இந்த புள்ளி விபரங்கள்)
 
Reader

Member
Messages
65
Points
18

Reputation:

உலகில் மதங்கள்

1. கிறித்துவர்கள் : 2.1. பில்லியன் (210 கோடி)
2. இசுலாமியர்கள்: 1.3 பில்லியன் (130 கோடி)
3. நாத்திகர்கள்: 1.1. பில்லியன் (110 கோடி)
4. இந்துக்கள்: 900 மில்லியன் (90 கோடி)
5. சீனாவின் பழைமைவாய்ந்த மதங்கள்: 394 மில்லியன் (39.4 கோடி)

6. புத்தமதம்: 376 மில்லியன் (37.6 கோடி)
7. பிரைமல் இன்டிஜினியஸ்: 300 மில்லியன் (30கோடி)
8. ஆப்பிரிக்காவின் பழைமையான மதங்கள்: 100 மில்லியன் (10 கோடி)
9. சீக்கியர்கள்: 23 மில்லியன் (2.3 கோடி)
10. ஜுக்: 19 மில்லியன் (1.9 கோடி)

11. ஸ்பிரிடிசம்: 15 மில்லியன் (1.5 கோடி)
12. ஜுடாய்சம்: 14 மில்லியன் (1.4 கோடி)
13. பஹாய்: 7 மில்லியன் (70 லட்சம்)
14. ஜைனமதம்: 4.2 மில்லியன் (42 லட்சம்)
15. ஷின்டோ: 4 மில்லியன் (40 லட்சம்)

16. கா டோய்: 4 மில்லியன் (40 லட்சம்)
17. ஜோரோஸ்டிரினிசம்: 2.6 மில்லியன் (26 லட்சம்)
18. டென்ரிக்யோ: 2 மில்லியன் (20 லட்சம்)
19. நியோ-பக்னிசம்: 1 மில்லியன் (10 லட்சம்)
20. யுனிட்ரியன்-யுனிவர்சலிசம்: 8 லட்சம் பேர்
21. ராஸ்டாஃபாரினிசம்: 6 லட்சம் பேர்
22. சயின்டாலஜி: 5 லட்சம் பேர்

இந்த ஆய்வின்படி உலகில் நாத்திகம் பேசுபவர்கள் 110கோடி பேர் உள்ளனர், உலகளவில் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

நாத்திகர்கள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள். இந்துக்களை விமர்சனம் செய்பவர்கள்தான் நாத்திகர் என்றில்லை.
மற்ற மதங்களில் நடைபெறும் மூடநம்பிக்கைகளையும் மற்ற நாட்டினர் விமர்சித்தே வருகிறார்கள் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.

இந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். எங்கு எது பெரும்பான்மை மக்களின் வாழ்வியலைத் தீர்மானிக்கிறதோ,
அங்கு அந்த மதம் விமர்சிக்கப்பட்டே வந்துள்ளது.

ஐரோப்பாவில் கிறிஸ்தவமும்,
அரேபியாவில் இஸ்லாமும்,
ஆசியாவில் பௌத்தமும்
விமர்சிக்கப்பட்டே வந்துள்ளது.

எங்கு ஒரு சமூகம் அரசையும், மதத்தையும் விமர்சிக்க தொடங்குகிறதோ அந்தச் சமூகம் முன்னேறத் துடிக்கிறது என்று பொருள்.
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

தமிழரின் வழிபாட்டு முறையும் இந்து மத வழிபாட்டு முறையும் வேறு வேறு என்று தானே நானும் கூறினேன்?? 🤔🤔
நீங்கள் புராணங்களை பற்றித்தான் கூறுகிறீர்கள். அத்தனையும் கட்டுக்கதை தான் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை.. விநாயகர் என்பது ஆசீவக கடவுள் என்று நம்புபவர்கள் இன்றும் உண்டு. அருக மதம் என்று சிலப்பதிகாரம் கூறுவது ஆசீவகம்.. கண்ணகியின் தந்தை அசீவக துறவியாக கடைசியில் மாறினார் என்பதே அதற்கு சான்று. ஆசீவகத்தில் தர்க்கம் என்பதும் நாத்திகம் என்பதும் அங்கீகரிக்கப் பட்ட ஒரு பிரிவாகும்.
இங்கு கடவுளர்கள் எல்லாம் மண்ணின் மக்களோடது.. பிற்காலத்தில் வந்த பூசை முறைகள் தான் ஆரியருடையது..
கால சூழ்நிலைக்கு ஏற்ப கடவுளர்கள் இங்கு மாறிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
திருப்பதியில் இருப்பது முருகன் என்றும் காளி என்றும் கூட பல கோட்பாடுகள் உண்டு. அதே போலத்தான். சைவ வைணவ சமண பௌத்த மதங்கள் இங்கே தழைத்தன.. ஏனெனில் பண்டைய தமிழனுக்கு மத வேறுபாடுகள் கிடையாது. அதனால் தான் இங்கே தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் உண்டு. அரேபிய வணிகத்தின் காரணமாக இஸ்லாத்தை அவர்கள் தழுவினர். கட்டாயமாக மதம் மாற்றப் பட்டவர்கள் அவர்கள் அல்லர். தன் இறையாண்மையை வரலாற்றை மறந்த தமிழ் இனம் சாதியத்தில் மூழ்கி இருக்கிறது. வாக்கரசியலுக்காக மக்கள் விழித்து விடாமல் பாதுகாக்க ஒரு பெரும் பூத கூட்டம் இங்கு உண்டு.
ஆக மொத்தத்தில் தமிழனுக்கும் இந்து மதத்திற்கும் சம்மந்தமே இல்லை!
 
தமிழனுக்கும் இந்து மதத்திற்க்கும் சம்பந்தமே இல்லை என்று மீண்டும் வழியுறுத்தி கூறியதர்க்கு நன்றிகள் பல.
 
Reader

Member
Messages
65
Points
18

Reputation:

காதோடு சொல்
காதோடு சொல்

யாரென்று சொல்
யாரென்று சொல்

பேரழகனா சொல்
கோடர்மோகனா சொல்
மாவீரனா சொல்
வாய் ஜாலனா சொல்

ஓடாதே சொல்லடி
ஓர் வார்த்தை சொல்

காவலனா சொல்
என் ஏவலனா சொல்
போராளியா சொல்
இல்லை ஓடோடியா சொல்

கீச்சு குரலா சொல்
கவி அரசா சொல்
இப்போதே சொல்
அடி இங்கேயே சொல்

மௌனியா சொல்
மாயனா சொல்

காதோடு சொல்
காதோடு சொல்

யாரென்று சொல்
யாரென்று சொல்

காதோடு சொல்
காதோடு சொல்

யாரென்று சொல்
யாரென்று சொல்

பேரழகனா சொல்
கோடர்மோகனா சொல்
எங்கே அவன் சொல்
ஏதேனும் சொல்

மாவீரனா சொல்
வாய்ஜாலான சொல்
காவலனா சொல்
என் ஏவலனா சொல்

கீச்சு குரலா சொல்
கவி அரசா சொல்
இப்போதே சொல்
அடி இங்கேயே சொல்

மௌனியா சொல்
மாயனா சொல்.
 
Reader

Member
Messages
65
Points
18

Reputation:

விக்ரம் என்றும் அழகு ஆண்மகன்
 
Reader

Member
Messages
65
Points
18

Reputation:

நஞ்சைகளே புஞ்சைகளே இரம்பைகளை விஞ்சி நிற்க்கும் வஞ்சிகளே....
 
Top