• Please use an working Email account to verify your memebership in the forum

The Alchemist

VOLDEMORT

Elite member
Messages
1,096
Points
143

Reputation:

ஆன்டலூசியா பகுதியைச் சேர்ந்த, சான்டியாகோ என்ற செம்மறியாட்டு இடையன் ஒருவனைப் பற்றியது. அவன் ஸ்பெயினில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு, பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷத்தைத் தேடி எகிப்தியப் பாலைவனத்திற்குச் செல்லுகிறான். வழியில் அவன் ஒரு குறவர்குலப் பெண்ணையும், தன்னை ஓர் அரசர் என்று கூறிக் கொள்ளுகின்ற ஓர் ஆணையும், ஒரு ரசவாதியையும் சந்திக்கிறான். அவர்கள் அனைவரும், அவன் தேடிக் கொண்டிருக்கின்றன பொக்கிஷத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய பாதையை அவனுக்குக் காட்டுகின்றனர். அது என்ன பொக்கிஷம் என்பதோ, வழியில் எதிர்ப்படும் முட்டுக்கட்டைகளை சான்டியாகோவால் சமாளிக்க முடியுமா என்பதோ அவர்கள் யாருக்கும் தெரியாது. ஆனால், லௌகிகப் பொருட்களைத் தேடுவதில் தொடங்குகின்ற ஒரு பயணம், தனக்குள் இருக்கும் பொக்கிஷத்தைக் கண்டறிகின்ற ஒன்றாக மாறுகிறது. வசீகரமான, உணர்வுகளைத் தட்டியெழுப்புகின்ற, மனிதாபிமானத்தைப் போற்றுகின்ற இக்கதை, நம்முடைய கனவுகளின் சக்திக்கும் நம்முடைய இதயம் சொல்லுவதைக் கேட்க வேண்டியதன் முக்கியத்துவத்திற்குமான ஒரு நிரந்தரச் சான்றாகும்.
 
Last edited:

VOLDEMORT

Elite member
Messages
1,096
Points
143

Reputation:

ஒருவருடைய "பிறவி நோக்கம்" என்றால் என்ன?

"வாழ்வில் நீ எப்பொதும் அடைய விரும்பி வந்துள்ள ஒன்று அது. தங்களுடைய பிறவி நோக்கம் என்ன என்பதை தங்களுடைய இளமைப்பருவத்தில் எல்லோருமே அறிந்திருகின்றனர். அவர்களுடைய வாழ்வில் அக்கணத்தில் எல்லாமே தெளிவாக இருக்கிறது. எல்லாமே சாத்தியமாக இருக்கிறது. கனவு காணுவதற்கும், தங்கள் வாழ்வில் தாங்கள் நிகழ்த்திப் பார்க்க விரும்புகின்ற எல்லாவற்றைக் குறித்தும் ஆசைபடுவதற்கும் அவர்கள் பயப்படுவதில்லை. ஆனால் கால்ம் செல்ல செல்லச் தங்களுடைய பிறவி நோக்கத்தைத் தங்களால் மெய்யாக்க முடியாது என்று ஏதோ ஒரு மர்மமான சக்தி அவர்களை நம்ப வைத்துவிடுகிறது"

"நீ உண்மையிலேயே ஒன்றை ஆழமாக விரும்பும்போது அதை நீ அடைவதற்கு இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் உன் உதவிக்கு வரும்"

" உன் இதயம் எந்த இடத்தில் இருக்கிறதோ அங்குதான் நீ உன்னுடைய புதையலைக் கண்டுபிடிப்பாய்"
 
VOLDEMORT

Elite member
Messages
1,096
Points
143

Reputation:

இதயம் கூறியது,

"நான் சில சமயங்களில் குறைப்பட்டு கொண்டாலும், நான் ஒருவருடைய இதயமாக இருப்பதால் தான் நான் அவ்வாறு நடந்து கொள்கிறேன். மக்களுடைய இதயங்களின் இயல்பு தான் அதுதான். மக்கள் தங்களுடைய மிக முக்கியமான கனவுகளைப் பின் தொடர்ந்து செல்ல பயப்படுகின்றனர். ஏனெனில், தாங்கள் அக்கனவுகளுக்கு தகுதியானவர்கள் அல்ல என்றோ அல்லது தங்களால் அவற்றை அடைய முடியாது என்றோ அவர்கள் கருதுகின்றனர். அப்போது, அவர்களுடைய இதயங்களான நாங்கள் பல்வேறு குறித்து பயம் கொல்லுகிறோம். அன்புக்குரியவர்கள் என்றென்றைகுமாகத் தொலைதூர இடங்களுக்கு செட்ரு விடுவது குறித்தோ, நல்ல கணங்களாக இருந்திருக்க வேண்டியவை அப்படி இல்லாமல் போனது குறித்தோ, கண்டுபிடிக்கபட்டிருக்கக்கூடிய புதையல்கள் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படாமல் மணலுக்குள் நிரந்தரமாக மறைந்திருப்பது குறித்தோ நாங்கள் பயப்படுகிறோம். ஏனெனில், இப்படிப்பட்ட விஷயங்கள் னிகழும்போது நாங்கள் பெரிதும் துன்புறுகிறோம்"
 
D

Deleted member 753

Guest
ஆன்டலூசியா பகுதியைச் சேர்ந்த, சான்டியாகோ என்ற செம்மறியாட்டு இடையன் ஒருவனைப் பற்றியது. அவன் ஸ்பெயினில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு, பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷத்தைத் தேடி எகிப்தியப் பாலைவனத்திற்குச் செல்லுகிறான். வழியில் அவன் ஒரு குறவர்குலப் பெண்ணையும், தன்னை ஓர் அரசர் என்று கூறிக் கொள்ளுகின்ற ஓர் ஆணையும், ஒரு ரசவாதியையும் சந்திக்கிறான். அவர்கள் அனைவரும், அவன் தேடிக் கொண்டிருக்கின்றன பொக்கிஷத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய பாதையை அவனுக்குக் காட்டுகின்றனர். அது என்ன பொக்கிஷம் என்பதோ, வழியில் எதிர்ப்படும் முட்டுக்கட்டைகளை சான்டியாகோவால் சமாளிக்க முடியுமா என்பதோ அவர்கள் யாருக்கும் தெரியாது. ஆனால், லௌகிகப் பொருட்களைத் தேடுவதில் தொடங்குகின்ற ஒரு பயணம், தனக்குள் இருக்கும் பொக்கிஷத்தைக் கண்டறிகின்ற ஒன்றாக மாறுகிறது. வசீகரமான, உணர்வுகளைத் தட்டியெழுப்புகின்ற, மனிதாபிமானத்தைப் போற்றுகின்ற இக்கதை, நம்முடைய கனவுகளின் சக்திக்கும் நம்முடைய இதயம் சொல்லுவதைக் கேட்க வேண்டியதன் முக்கியத்துவத்திற்குமான ஒரு நிரந்தரச் சான்றாகும்.
Six Keys of Edoxus Padichirkingla ji? ???
 
Top