• Please use an working Email account to verify your memebership in the forum

எங்கே அவர்கள்?

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

இந்த பதிவு தனியார் மருத்துவமனை பற்றியும், தனியார் மருத்துவர் பற்றியுமே.. உயிரை பணயம் வைத்து கொரோனாவுக்கு எதிராக போராடும் உண்மையான மருத்துவருக்கு எதிராக அல்ல..

மாதம் இருமுறை பரிசோதனை செய்ய வேண்டும் இல்லையென்றால் ஆபத்து..

உடனே பெட்டில் சேருங்கள் இல்லையென்றால் நிலைமை மோசமாகிவிடும்..

இந்தியாவிலேயே அந்த சிகிச்சையில் நாங்கள் தான் முதலிடம் இந்த அறுவைசிகிச்சைக்கு எங்களிடம் ஜெர்மன் உபகரணங்கள் உள்ளது..

இப்படி விளம்பரம் மேல் விளம்பரம் செய்த மருத்துவமனைகளையும் மருத்துவரையும் இந்த கொரோனா வந்த பின்பு எங்கேனும் கண்டீர்களா?

அவர்கள் ஒருபுறம் இருக்க இவ்வளவு நாள் நாம் மருத்துவமனை செல்லாமலே சரியாகும் எத்தனை எத்தனை வியாதிகளுக்கு மருத்துவமனைக்கு ஓடினோம் என்று சிந்தித்து பாருங்கள்.. அதுவும் தனியார் மருத்துவமனையே சிறப்பாக பார்ப்பார்கள் என்று தேடி தேடி ஓடினோமே..

உண்மையில் நாம் மருத்துவமனைக்கு சென்று பழக்கப்பட்டுவிட்டோம்.. Unlimited call, free internet வந்த பின்பு எப்படி நம்மால் ஒருநாள் கூட Validity date முடிந்து இருக்க முடியவில்லையோ அதேபோல் நம்மால் சின்ன சின்ன வியாதிகளுக்கும் நம் உடலே சரிசெய்துகொள்ளும் சிறு பிரச்சனைகளுக்கும் மருத்துவமனை செல்லாமல் இருக்கமுடியவில்லை..

அதற்கு காரணம் உயிர் பயமே.. பூராண் கடித்தாலும் பூண்டை தேய்த்துவிட்டு வேலை பார்த்த நம் தாத்தாகளின் தைரியம் நம்மிடம் இல்லை.. நாம் தான் எறும்பு கடித்தாலே ஆன்டிபயாடிக் தேடுகிறோமே..

இன்று கொரோனா என்னும் உயிர்கொல்லி வந்த பின்பு நமக்கு பல வியாதிகளின் மேல் உள்ள பயம் போன பின்பே உணர்கிறோம்.. இதற்கா இவ்வளவு பயந்தோம் என்று..

ஒன்றை மட்டும் உணர்வோம்.. தனியார்க்கு என்றுமே இலாபம் மட்டுமே குறிக்கோள்.. இன்று அவர்களுக்கு இதில் லாபமும் இல்லை முகாந்திரமும் இல்லை.. ஓடி ஒளிந்திருப்பார்கள்.. இனியேனும் பயத்தை வீசி எறிந்து மருத்துவ மாஃபியாவிடம் சிக்காமல் இருப்போம்..
 
Top