• Please use an working Email account to verify your memebership in the forum

பூரண மதுவிலக்கு

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சட்டம் ஆங்கிலேயரால் 1943 ல் கொண்டு வரப்பட்டது.. ஆனாலும் கள்ளசாரயம் காய்ச்சுவதோ கல் இறக்குவதோ குறையவில்லை.. சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் 1948ல் போதை பொருட்கள் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு தண்டனைகள் கடுமையாக்கப்பட்டது.. அதன்பின் 1951ல் தமிழகத்தில் மது உள்ளிட்ட போதை பொருட்களின் ஆதிக்கம் முற்றிலுமாக ஒழிந்தது என்றே கூறலாம்..

ஆனால் 1971 இல் மீண்டும் மதுவிலக்கு தளர்வு செய்யப்பட்டது.. அரசின் வருவாய் காரணமாகவும் குடி நோயாளிகளின் நலன் கருத்தில் கொள்வதாகவும் சொல்லப்பட்டது.. அதன்பின் 1975ல் மதுவிலக்கு 1979 ல் தளர்வு என்று மாறி மாறி நடந்த நகைச்சுவைகளை மீறி இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது டாஸ்மாக்..

சரி முதலில் அவர்கள் சொல்லும் அரசின் வருவாய் இழப்பு உண்மை தானா?

தமிழகத்தின் சராசரி வருவாய் 1,50000 கோடி.. கடன் 400000கோடி...
இதில் தமிழகத்திற்கு டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் 28000 கோடி..
தமிழகத்தில் நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறைக்கும் மின்சாரதுறைக்கும் இதர இலவச திட்டங்களுக்கும் அதிகம் செலவிடுவதாக அரசு தரப்பு சொல்கிறது..

முதலில் போக்குவரத்து துறை ஏன் நஷ்டமானது.. மத்திய அரசின் வரி மாநில அரசின் வரி என்று பெட்ரோல் டீசலுக்கு நாம் செலுத்தும் வரி மட்டுமே 50ரூபாய் வரை இருக்கும்.. போக்குவரத்து துறைக்கு மாநிலவரி இல்லாமல் டிப்போவிற்கு வரும்.. அப்படி என்றால் ஏறக்குறைய 25 ரூபாய் குறைவே.. தனியார் பேருந்துபோல் பராமரிப்பு அதிகம் இல்லை.. காலாவதி ஆகியும் இன்னும் இயங்கி கொண்டு இருக்கும் பேருந்துகள் 3000கும் மேல்.. பின்பு ஏன் நஷ்டமடைகிறது..
பேருந்துகளின் உதிரிபாக விற்பனை கணக்கு கடந்த 17 ஆண்டுகளாக கணக்கிலேயே வரவில்லை.. அவை எங்கே... போக்குவரத்து துறை நஷ்டமாகவில்லை.. ஆக்கப்பட்டுள்ளது..

அடுத்து மின்சாரத்துறை.. 2013 வரை இலாபத்தில் சென்ற மின்சாரத்துறை நஷ்டமானது எப்படி.. வினியோக உரிமம் மற்றும் பொருள் கொள்முதல் ஒப்பந்தம் தனியார் வசம் ஆன பின்பு தானே.. பின்பும் ஏன் இன்னும் தனியார் வசம் உள்ளது?

அடுத்து இலவச திட்டங்கள்.. கல்வி , மருத்துவம், விவசாயத்தில் இலவசம் வேண்டாம் என்றோ அத்யாவசிய பொருள் மானியத்தையோ எதிர்க்க தேவையில்லை.. ஆனால் உபயோகமில்லாத இலவசங்கள் இங்கே எத்தனை எத்தனை?

எல்லாவற்றிற்கும் மேல் தமிழக கனிமவள கொள்ளைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க டெண்டர் முறையை ஒழித்து அரசே வினியோகமுறை செயல்படுத்த வேண்டும்.. அப்படி செய்தால் ஆண்டிற்கு 100000 கோடி அரசு வருவாய் ஈட்டலாம்.. மேலும் கனிமவள கொள்ளையை தடுக்கலாம் என்று ஜெயரஞ்சன் கமிட்டி முதல் சகாயம் கமிட்டி வரை கொடுத்த வரைவுகள் குப்பை தொட்டி சென்றதே...

Midas, snj, golden vats, kings india chemical, eite இப்படி தமிழகத்திற்கு வினியோகம் செய்யும் அனைத்து தொழிற்சாலைகளுமே அரசியல்வாதிகளின் சொத்துகளே..
இவர்கள் குடி நோயாளி மேல் கருணை கொண்டு டாஸ்மாக் நடத்தவில்லை.. அவர்களின் விற்பனை சந்தையை அவர்கள் இழக்க விரும்பவில்லை..

குடி நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு டாஸ்மாக் மூடப்படும் என்று அரசு அறிவித்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது.. ஒரு நோயாளியின் கவுன்சிலிங் காலம் மூன்றுமாதம்.. நாம் 60 மாதங்களை கடந்துவிட்டோம்..

இங்கே அரசியல்வாதியின் வாக்குவங்கி நீடிக்கவும் அவர்கள் வருமானம் நீடிக்கவும் மக்கள் குடிநோயாளிகளாகவே இருக்க வேண்டும்..

பூரண மதுவிலக்கு சாத்தியமா இல்லையா என்பது மக்கள் விரல் நுனியிலேயே உள்ளது...
 

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

குறிப்பு:
குடிநோயாளிகள் பற்றிய விவாதம் 2013 ஆண்டிலிருந்து மிகப் பெரிய விவாதங்களாக நடந்து.. அதன் பின் ஜெயலலிதா ஒரு மருத்துவ குழு அமைத்து அந்த குழு வரைவு தாக்கல் செய்ததும் குறிப்பிடதக்கது.. என்னால் குடிக்காமல் இருக்க முடியாது என்னும் நிலையுள்ள குடி நோயாளிக்கு சிகிச்சையும் மதுவும் மருத்துவர் ஆலோசனைப் படி வழங்கலாம் என்றனர்.. அதன் பின்பே ஜெயலலிதா மெல்ல மெல்ல டாஸ்மாக் மூடப்படும்.. அரசின் வருவாய்க்கு மாற்று ஏற்பாடு செய்துகொண்டே 500 கடைகள் வீதம் மூடப்படும் என்னும் வாக்குறுதியை 2016ல் அளித்தார்..
 
Top