• Please use an working Email account to verify your memebership in the forum

write off

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

Write off, waiver என்றால் என்ன?


2016 ல் Business standard என்னும் பத்திரிக்கையில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திரு. கே.சி.சக்கரவர்த்தி அவர்கள் "Write off என்பது ஓர் சட்டப்படி நடக்கும் மிகப் பெரிய ஊழல்" என்று விவரித்திருந்தார்.. இந்த Write off என்றும் மக்களுக்கு பயன் தராது என்றும் சொன்னார்..

சரி.. முதலில் இந்த Write off மற்றும் Waiver என்றால் என்ன என்று பார்ப்போம்..

வங்கிகள் உங்களுக்கு கொடுக்கும் கடன் அனைத்தும் வங்கியீன் சொத்து கணக்கிலேயே சேரும்.. அது விவசாயிக்கு கொடுக்கும் 5000 ரூ முதல் மல்லையாவிற்கு கொடுக்கும் 5000 கோடி வரை அது வங்கியின் சொத்து மதிப்பே...

இந்த சொத்துக்களுக்கு வங்கிகள் அரசிற்கு வரி செலுத்தும்.. உதாரணமாக உங்களுக்கு ஒருகோடி கடன் கொடுத்தால் வங்கி உங்களிடமிருந்து வட்டியை பெற்றுக்கொள்ளும்.. அரசிற்கு வரி செலுத்தும்..

ஒரு காலகட்டத்தில் நீங்கள் அந்த கடன் தொகைக்கு வட்டி கட்டவில்லை என்றாலும் வங்கி தன்னுடைய சொத்தான உங்களிடம் இருக்கும் ஒரு கோடிக்கும் சேர்த்தே வரி செலுத்தும்..

இப்படி நீண்ட நாள் வாரா கடனிற்கும் சேர்த்து வரி செலுத்தினால் என்ன ஆகும்? வங்கியின் இருப்பு சொத்து குறையும்.. எனவே அதிலிருந்து தன்னை தற்காத்துகொள்ள வங்கி எடுக்கும் ஆயுதமே Write off ( or) waiver..

Waiver என்பது முழுமையான தள்ளுபடி.. உதாரணமாக விவசாயகடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி போன்றவற்றை சொல்லலாம்..

Write off என்பது என்னால் என் சொத்தை( கடனை) மீட்க முடியவில்லை.. எனவே எனக்கு மீட்டு கொடுங்கள் என்று வங்கிகள் அரசிடம் சரணடைவது போன்றது.. Write off நிலைக்கு வந்த சொத்திற்கு வங்கி வரி செலுத்த தேவையில்லை.. எனவே நீண்டநாள் நிலுவை கடனை வங்கிகள் தள்ளிவைப்பு செய்கின்றன..

சரி.. அப்படியென்றால் இந்த கடன் எல்லாம் தள்ளுபடி இல்லையே.. தள்ளி வைப்பு தானே.. அதற்கு ஏன் கொந்தளிக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்..

இதுவரை இந்தியாவில் Write off செய்யப்பட்ட கடன்களில் திருப்பி வசூலிக்கப்பட்டவை வெறும் 15% மட்டுமே.. ஆம் தள்ளுபடிக்கும் தள்ளிவைப்பிற்கும் வித்யாசம் எதுவும் இல்லை..

இதைதான் கே.சி. சக்கரவர்த்தி அவர்கள் ஆதங்கத்துடன் Write off. சாமானிய மக்களுக்கு செய்யப்படுவதில்லை.. பெருமுதலாளிகளுக்கே செய்யப்படுகிறது.. Writ off ஒரு சட்டப்படி நடக்கும் ஓர் மிகப் பெரும் ஊழல் என்று கூறியிருந்தார்.
 
Top